Advertisment

தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க, உத்தரகாண்ட் & கோவாவுக்கு விரைந்த காங்கிரஸ், பாஜக தலைவர்கள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கோவா மற்றும் உத்தரகாண்ட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என முடிவுகள் வெளியான நிலையில், தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க, உத்தரகாண்ட் & கோவாவுக்கு விரைந்த காங்கிரஸ், பாஜக தலைவர்கள்

author-image
WebDesk
New Update
தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க, உத்தரகாண்ட் & கோவாவுக்கு விரைந்த காங்கிரஸ், பாஜக தலைவர்கள்

Avaneesh Mishra , MAYURA JANWALKAR

Advertisment

Elections: Resorts lined up, leaders rush to Uttarakhand and Goa as BJP, Congress brace for hung Houses: உத்தரகாண்ட் மற்றும் கோவா தேர்தல் முடிவுகள் அனல் பறக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்துள்ள நிலையில், இரு மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய நகர்வுகளுக்கு தயாராகி வருகின்றன. கோவாவில், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பாம்போலிமில் உள்ள ஒரு ஹோட்டலில் கூடி விவாதித்து வருகின்றனர், ​​​​இதேபோல் உத்தரகாண்டிலும் காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி பரிசீலித்து வருகிறது.

உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 10) வெளியாக உள்ள நிலையில், தேர்தல் நிர்வாகத்திற்காக மூத்த தலைவர்களை காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் கட்சிக்காக முன்னர், இதேபோன்ற பணிகளைச் செய்தவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், கோவாவில் சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், சத்தீஸ்கரின் மூத்த தலைவர் டிஎஸ் சிங் தியோ மற்றும் வின்சென்ட் பாலா ஆகியோர் மணிப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஆகியோர் பஞ்சாபுக்கும், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் சிங் ஹூடா உத்தரகாண்டிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில், கட்சி தலைவர்கள் எதிர்கட்சி முகாம்களால் இழுக்கப்படாலாம் என்ற பேச்சுக்கு மத்தியில், கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி திங்களன்று ஜெய்ப்பூருக்குச் சென்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பாஜகவை ஆட்சி அமைக்க விட்டு காங்கிரஸ் அதன் கைகளை அப்போது சுட்டுக் கொண்டது. 17 எம்.எல்.ஏ.க்கள் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது முடியப்போகும் சட்டசபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

உத்தரகாண்ட்டில், 2016-ல் காங்கிரஸ் அணிகளில் பிளவை வெற்றிகரமாக ஏற்படுத்திய மூத்த பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் தற்போதைய உத்தரகாண்ட் வருகையை காங்கிரஸ் நடுக்கத்துடன் பார்க்கிறது.

கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், “எங்கள் மூத்த தலைவரின் (திகம்பர் காமத்) பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நாங்கள் கூடியுள்ளோம். அனைத்து வேட்பாளர்களும் கொண்டாட்டத்திற்கு வந்துள்ளனர். விடுதியில் தங்க விரும்புபவர்களுக்கு (ஹோட்டலில்) நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம், அவர்களில் பெரும்பாலோர் தங்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். விடுதியில் தங்கும்படி கட்சி யாரையும் கூறவில்லை என்றும், தங்கும் விருப்பம் வேட்பாளர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைத் தவிர, கட்சியின் மற்ற தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர், சிலர் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும், மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதாகவும் தெரிவித்தனர்.

ஒரு நாள் முன்னதாக கோவாவிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “தோழமை உணர்வில்” தனது வேட்பாளர்களை பொது இடத்துக்கு செவ்வாய்க்கிழமை மாற்றுவது குறித்தும், பாஜகவின் “கெட்ட தந்திரங்களை தடுக்க தயாராக இருப்பதும் குறித்தும் கட்சி முடிவெடுக்கும்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

காங்கிரஸின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிற தலைவர்களும் பாம்போலிமில் உள்ள ஹோட்டலில் கூடியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை டேராடூன் வந்த பாஜகவின் விஜயவர்கியா, தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிரான கிளர்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளரான விஜயவர்கியா முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மாநிலம் சென்றதால், வருத்தமடைந்த ஹரிஷ் ராவத் உத்தரகாண்டில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தார். 2017 தேர்தலில், காங்கிரஸ் கட்சி 11 இடங்களை மட்டுமே வென்றது, பாஜக 70 இல் 57 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதையத் தேர்தலில், காங்கிரஸ் பிரச்சாரத்தில் ராவத் மீண்டும் முன்னிலைக்கு வந்ததோடு, காங்கிரஸின் முகமாகவும் மாறினார்.

காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் மதுரா தத் ஜோஷி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், விஜயவர்கியாவின் தற்போதைய உத்தரகாண்ட் வருகை குறிப்பிடத்தக்கது என்று கூறினார். மேலும், தேவைப்பட்டால், வெற்றி பெறும் எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

"2016 ஆம் ஆண்டில், விஜயவர்கியா இங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார், எங்கள் (காங்கிரஸ்) அரசாங்கத்தை அகற்றிய பின்னரே வெளியேறினார்" என்று ஜோஷி கூறினார்.

இதனிடையே விஜயவர்கியா, வாக்கு எண்ணிக்கைக்கு முன் கட்சி தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க தான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வந்ததாக கூறினார். மேலும், "சில நேரங்களில் தேர்தல் பணிகளில் புதிய பணியாளர்கள் உள்ளனர்... BJP தேர்தலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும், அதனால் நாங்களும் வாக்கு எண்ணிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்று விஜயவர்கியா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கோவாவில், காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். என்டிடிவியிடம் பேசிய அவர், “பாஜக அல்லாத அணியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே முயற்சியை கோவாவிலும் ஏன் செய்யக்கூடாது?” என்றும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பாஜக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செவ்வாய்க்கிழமை டெல்லி சென்றார். மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் கீழ்கண்டவாறு ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: டெல்லி பாதுகாப்பு குழுவில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றும் முயற்சியில் உக்ரைன் தோல்வி

“இன்று புதுடெல்லியில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியை சந்தித்தேன். கோவா சட்டமன்றத் தேர்தல் 2022 இல் பாஜகவின் வலுவான செயல்பாடு குறித்து பிரதமரிடம் விளக்கினேன், தேர்தல் முடிவுகள் மக்களின் ஆசியுடன் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கும். அவரது ஆற்றல்மிக்க தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.” இவ்வாறு சாவந்த் ட்வீட் செய்தார்.

முன்னதாக செவ்வாய்கிழமை சாவந்த், “பாஜக முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களுக்கு ஓரிரு இடங்கள் குறைவாக இருந்தால், வெற்றி பெறும் சுயேட்சைகள் எங்களை ஆதரிப்பார்கள்” என்றார்.

கட்சியின் பிற மூத்த தலைவர்கள் மும்பையில் கோவா தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்திக்க உள்ளனர். கோவா பாஜக மூத்த தலைவர் ஒருவர், ஆட்சியைத் தக்கவைக்க "தெளிவான உத்தியை" வடிவமைத்துள்ளதாகக் கூறினார். "எங்கள் தலைவரை (சட்டமன்ற குழு தலைவரை) முடிவு செய்ய நாங்கள் எந்த நேரத்தையும் வீணாக்க மாட்டோம், மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்" என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோவா தலைவர் கிரண் கண்டோல்கர் தனது கட்சி 7-8 இடங்களையும், அவர்களின் கூட்டணி கட்சியான MGP 4-5 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறினார். மேலும், மற்ற கட்சிகளைப் போலல்லாமல், டிஎம்சி அதன் எம்எல்ஏக்களை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி அலுவலகத்திற்கு வருமாறு கேட்கவில்லை, முதலில் அவர்களின் கொண்டாட்டங்களை நடத்துங்கள் என்று கூறியுள்ளோம் என கண்டோல்கர் கூறினார்.

“எங்கள் வேட்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று நாங்கள் பயப்படவில்லை. டிஎம்சி மற்றும் எம்ஜிபியின் ஆதரவு இல்லாமல் யாரும் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று கண்டோல்கர் கூறினார்.

டிஎம்சி தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ராஜ்யசபா எம்பி டெரெக் ஓ பிரையன் மற்றும் கட்சியின் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை கோவா சென்றனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் (எம்ஜிபி) மூத்த தலைவர் ராமகிருஷ்ணா என்கிற சுதின் தவாலிகர், கோவாவில் ஆட்சி அமைப்பதில் தங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். 2019 ஆம் ஆண்டில் 12 எம்.எல்.ஏக்கள் (எம்.ஜி.பி-யில் இருந்து இருவர் உட்பட) பாஜகவுக்கு மாறிய பின்னர், பாஜக முழுப்பெரும்பான்மை பெற்ற பின்னர், அரசாங்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் முன்னாள் துணை முதல்வரான சுதின் தவாலிகர் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தார்.

எம்ஜிபி, டிஎம்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. 1999 முதல் பல தேர்தல்களில் எம்ஜிபி "கிங் மேக்கராக" இருந்து வருகிறது என்று தவாலிகர் கூறினார். மேலும், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய கட்சிகளின் கண்களைத் திறந்துவிட்டன. இதை நான் பல நாட்களாக சொல்லி வருகிறேன். எம்ஜிபி இம்முறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எம்ஜிபி 6-9 இடங்களை வெல்லும் என்றும், ஒன்பது இடங்கள் வரை வெற்றி பெறுவோம் என்றும் ஒரு புதிய கணிப்பு உலா வருகிறது. 3 முதல் 4இல் டிஎம்சி வெற்றி பெற்றால், நாங்கள் கூட்டணியாக 13-14 என்ற கணக்கில் பெறலாம். திரிணாமுல் காங்கிரஸூம் நாங்களும் ஒன்றாக அமர்ந்து சரியான முடிவை எடுப்போம். திரிணாமுல் காங்கிரஸுடன் சேர்ந்து நாங்கள் எடுக்கும் எந்த முடிவும் இறுதியானது, என்றும் அவர் கூறினார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபையில் காங்கிரஸூக்கோ அல்லது பாஜகவுக்கோ 40 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று எந்த கருத்துகணிப்புகளும் கூறவில்லை. மேலும் உத்தரகாண்டில் கடும் போட்டி நிலவுவதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் 2000-ம் ஆண்டு முதல் எந்த கட்சியும் ஆட்சியை தக்கவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவிலும், பாஜகவோ அல்லது காங்கிரஸோ எளிதாக வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன.

(ENS டெல்லி, PTI உள்ளீடுகளுடன்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Goa Congress Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment