Advertisment

பாராட்டத்தக்க பணி: பென்ஷன் பணத்தில் சாலை குழிகளை அடைத்துவரும் முதியவர்

ஐதராபாத்தில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர், தன் முதுமையையும் பொருட்படுத்தாமல், தன் பென்ஷன் பணத்தில் குண்டும் குழியுமான சாலைகளை சரிசெய்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gangadhara Tilak Katnam,Hyderabad,Hyderabad City,potholes

ஐதராபாத்தில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர், தன் முதுமையையும் பொருட்படுத்தாமல், தன் பென்ஷன் பணத்தில் குண்டும் குழியுமான சாலைகளை சரிசெய்து வருகிறார். அவருடைய இந்த சேவையை பலரும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

ஐதராபாத்தை சேர்ந்த கங்காதர திலக் கத்னம் ரயில்வேயில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றினார்.

இந்நிலையில், சாலையில் உள்ள குழிகளால் பல விபத்துகள் நேர்ந்ததை கண்ணால் பார்த்த கங்காதர திலக், அதனால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால், கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து தன் பென்ஷன் பணத்தில் சாலையில் உள்ள குழிகளை அடைப்பதை பிரதிபலன் எதிர்பாராத பணியாகவே செய்து வருகிறார். இதுவரை, 1,302 குழிகளை அடைத்துள்ளார்.

இதற்காக தன் காரை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.

Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment