பணக்காரர்களுக்குப் பிடித்த தேர்தல் பத்திரங்கள்: 91% பேருக்கு மேல் ரூ.1 கோடி நன்கொடை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம், மொத்தம் 12 கட்டங்களில் முதல் 11 கட்டங்களில் ரூ.5,896 கோடி...

உதித் மிஸ்ரா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம், மொத்தம் 12 கட்டங்களில் முதல் 11 கட்டங்களில் ரூ.5,896 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதில் 91 சதவீதத்திற்கும் மேல் ரூ.1 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் உள்ளன.

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை வலியுறுத்தும் சமூக ஆர்வலர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா ஆவணங்களைப் பெற்றுள்ளார். அதன்படி, மார்ச் 1, 2018 மற்றும் ஜூலை 24, 2019 க்கு இடையில் முதல் 11 கட்டங்களில் விற்பனைச் செய்யப்பட்ட பத்திரங்களின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 99.7 சதவீதம் ரூ.1 கோடி (அதிகபட்சம் கிடைத்த தொகை) மற்றும் ரூ.10 லட்சம் கொண்ட பத்திரங்கள் உள்ளன.

ரூ.1,000, ரூ.10,000. ரூ.1 லட்சம் பிரிவுகளில் – வெறும் ரூ.15.06 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மொத்தம் 11,782 பத்திரங்கள் விற்கப்பட்ட்டுள்ளன. அவற்றில் ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 5,409 பத்திரங்களும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள் 4,723 பத்திரங்களும் அடங்கியுள்ளன.

அதே போல, இதில் ரூ.10,000 மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 60 பத்திரங்களும் ரூ.1,000 மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 47 பத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உயர் மதிப்பு பத்திரங்கள் அதிக அளவில் கிட்டத்தட்ட முழு பணமும் சமூகத்தின் பணக்கார பிரிவில் இருந்து வந்துள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close