Advertisment

உ.பி. தொழிலதிபர் வீட்டில் சிக்கிய ரூ. 150 கோடி; தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிரடி ரெய்டு

“கான்பூர் தொழிலதிபர் வீட்டில் கைப்பற்றிய பணம் பாஜகவின் பங்கில் ஒரு பகுதி… SPக்கும் பாஜகவின் இந்த நண்பருக்கும் அவரது வாசனை திரவியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

author-image
WebDesk
New Update
Rs 150 crore seized from office of UP businessman

பியூஷ் ஜெய்ன் என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக அடிக்கிவைக்கப்பட்டிருக்கும் ரூ. 150 கோடி பணம்

Rs 150 crore seized from office of UP businessman: பான் மசாலா மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் தொழிலதிபர் பியூஷ் ஜெய்னுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனை மூலம் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுவரை ரூ. 150 பணத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

பிப்ரவரி மாதத்தில் உ.பி.யில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆளும் கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் ஜெய்னுடன் தொடர்பு இருப்பதாக மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி. உளவுப்பிரிவின் பொது இயக்குநரகம் அளித்த தகவல்களின் படி “அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் படி கான்பூரில் சோதனை புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. கான்பூரில் உள்ள திருமூர்த்தி ஃப்ரேக்ரன்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற சிகர் பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது”.

வாசனை திரவியத்திற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கும் ஒடேச்சம் தொழிற்சாலையின் கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பேப்பரில் சுற்றிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கான்பூர் எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் இந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 150 கோடியை தாண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரி வாரியம் நடத்திய சோதனைகளில் அளவுக்கு அதிகமான பணம் சிக்கியிருப்பது இதுவே முதல்முறை என்று ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சியிடம் வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி கூறியுள்ளார். இதுவரை இந்த பணம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. தேர்தல், பிரச்சாரங்களை நிறுத்துவது தொடர்பாக யோசிக்கவும் – மோடிக்கு நீதிபதி வேண்டுகோள்

போலியாக இன்வாய்ஸை உருவாக்கியது மற்றும் போலியாக கிரெடிட் வழங்கியது போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. பான் மசாலா உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் வீடுகளில் சோதனைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். பான் மசாலா நிறுவனத்திற்கு வாசனை திரவிய பொருட்களை வழங்கி வருவதால் ஒரு நிறுவனத்தின் அலுவலகமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

சரக்குகளை நகர்த்தும்போது இ-வே பில்களை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்காக, டிரான்ஸ்போர்ட்டர், உண்மையில் இல்லாத நிறுவனங்களின் பெயரில் பல விலைப்பட்டியல்களை உருவாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரான்ஸ்போர்ட்டர் அத்தகைய ரகசிய சப்ளையின் விற்பனை வருவாயை ரொக்கமாக சேகரித்து கமிஷனைக் கழித்து உற்பத்தியாளரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில்கள் இல்லாத நான்கு ட்ரக்குகளை அதிகாரிகள் அந்த தொழிற்சாலையின் வெளியே கைப்பற்றியுள்ளனர்.தொழிற்சாலை வளாகத்தில், பௌதிக கையிருப்பின் போது, ​​முடிக்கப்பட்ட பொருட்கள் இரகசியமாக அகற்றப்பட்டதால், மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை கவனிக்கப்பட்டது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் ஜிஎஸ்டி இல்லாமல் பொருட்களை அனுமதித்ததை ஒப்புக்கொண்டார் என்றும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி செலுத்தாமல் சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட போலி விலைப்பட்டியல்கள், கணபதி ரோடு கேரியர்ஸ் நிறுவன வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு, ரூ.1.01 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக இருக்கும் கன்னோஜ்ஜில் பிறந்து வளர்ந்த ஜெய்னின் இடங்களில் இருந்து பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “எதிர்க்கட்சியினர் ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்க்களிடம் இருந்து உதவியை பெறுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

அயோத்தி நில விற்பனை விவகாரம்: “சோர் பஜார்” என பாஜகவை சாடிய சாம்னாவின் தலையங்கம்

சமாஜ்வாடி கட்சியின் நெருங்கிய வட்டாரங்களில் இருக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனை நடத்தப்படுகிறது. கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஊழல் மூலம் கணக்கில் வராத சொத்துக்களை குவித்துள்ளனர். இப்போது தேர்தல் வருவதால், அவர்கள் தங்கள் லாக்கர்களைத் திறக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி, எஸ்.பிக்கும் ஜெய்னுக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். மேலும் அவர் எங்களுடைய கட்சியிலும் இல்லை. எங்களுக்கு அவரை தெரியாது என்றார். மற்றொரு தேசிய செய்தித்தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான அனுராக் பதௌரியா “கான்பூர் தொழிலதிபர் வீட்டில் கைப்பற்றிய பணம் பாஜகவின் பங்கில் ஒரு பகுதி… சமாஜ்வாடிக்கும் பாஜகவின் இந்த நண்பருக்கும் அவரது வாசனை திரவியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

பாஜக தேசிய தொடர்பாளர் சம்பித் பத்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயின் வளாகத்தில் நடந்த சோதனைகளின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். “மக்கள் பணம், எங்களின் பணம் என்று சமாஜ்வாடி ஒரு ஸ்லோகம் சொல்லும். சாமாஜ்வாடியின் வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தது பியூஷ் ஜெய்ன் தான். அவருடைய வீடு தான் தற்போது ஜி.எஸ்.டி. அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு ரூ. 100 கோடிக்கும் மேல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று ட்வீட்ட்ல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 9ம் தேதி அன்று அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி திரவியம் என்று செய்தியாளார்கள் சந்திப்பில் வாசனை திரவியம் ஒன்றை அறிமுகம் செய்து இது சமாஜ்வாடியின் நறுமணத்தை சுமக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த வாசனை திரவியத்தை கன்னோஜ் கட்சியின் எம்எல்சி புஷ்ப்ராஜ் ஜெயின் குழுவினர் தயாரித்துள்ளனர். வெள்ளிக்கிழமை, “எனக்கும் பியூஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய கட்சிக்காக நான் வாசனை திரவியத்தை உருவாக்கினேன். நானும் பியூஷும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் பிரச்சனை. அவர் வீட்டில் ரெய்டு நடந்தால் அதனை அவர் சமாளிக்கட்டும். எஸ்.பிக்காக அறிமுகம் செய்யப்பட்ட வாசனை திரவியத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார் புஷ்ப்ராஜ்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment