Advertisment

மத மாற்றத்திற்கு நிதி உதவி: அமேசானை தாக்கி எழுதிய ஆர்.எஸ்.எஸ்

அமேசான் நிறுவனம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்றத்திற்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஆர்எஸ்எஸ் 'தி ஆர்கனைசர்' இதழில் தாக்கி எழுதியுள்ளது.

author-image
WebDesk
New Update
RSS-linked magazine targets Amazon, says funding conversions in tamil

The cover of the latest Organiser issue

உலகிலே மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனங்களுள் ஒன்றாக அமேசான் நிறுவனம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்றத்திற்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஆர்எஸ்எஸ்-இன் இணைந்த இதழான 'தி ஆர்கனைசர்' அதன் சமீபத்திய பதிப்பில் அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது.

Advertisment

"அமேசிங் கிராஸ் கனெக்ஷன்" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியில், "அமெரிக்கன் பாப்டிஸ்ட் சர்ச்" என்ற பெயருடைய நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் நிதித் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்றும் அந்த இதழ் குற்றம் சாட்டியுள்ளது.

“அமெரிக்கன் பாப்டிஸ்ட் சர்ச் (ஏபிஎம்) நடத்தும் கிறிஸ்தவ மதமாற்ற தொகுதிக்கு ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிதியுதவி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மிஷனரி மதமாற்ற பணிக்கு நிதியளிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏபிஎம் நடத்தும் பணமோசடி வளையத்தின் சாத்தியம் உள்ளது,” என்று தி ஆர்கனைசர் இதழ் அதன் கவர் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளது.

மேலேயும், ஏபிஎம் இந்தியாவில் ஆல் இந்தியா மிஷன் (ஏஐஎம்) என்ற பெயரில் முன்னணியை நடத்தி வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. "இது அவர்களின் முன்னணி அமைப்பாகும். இது வடகிழக்கு இந்தியாவில் 25 ஆயிரம் பேரை கிறிஸ்தவர்களாக மாற்றியதாக தங்கள் வலைத்தளத்தில் வெளிப்படையாகக் கூறியுள்ளது" என்று தி ஆர்கனைசர் இதழ் கூறுகிறது.

அதோடு, AmazonSmile லோகோவுடன், அமேசான் மூலம் AIM இன் நிதியளிப்பு முறையீட்டின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டியுள்ள தி ஆர்கனைசர் இதழ் "அமேசான் ஒரு இந்தியரின் ஒவ்வொரு வாங்குதலுக்கும் பணத்தை நன்கொடையாக அளிப்பதன் மூலம் அகில இந்திய மிஷனின் மாற்றத் தொகுதிக்கு நிதியுதவி செய்கிறது." என்று கூறுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அமேசான் மறுத்துள்ளது. இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் தொடர்பு கொண்டபோது, ​​“அமேசான் இந்தியாவுக்கு அகில இந்திய மிஷன் அல்லது அதன் துணை நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை அல்லது அமேசான் இந்தியா சந்தையில் AmazonSmile திட்டம் செயல்படவில்லை. AmazonSmile திட்டம் செயல்படும் இடத்தில், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்க தேர்வு செய்யலாம். அமேசான் ஸ்மைல் திட்டம், திட்டத்தில் பங்கேற்கும் எந்த தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களையும் அங்கீகரிக்கவில்லை." என்று தெரிவித்தார்.

செப்டம்பரில் இதழின் முந்தைய அறிக்கைக்குப் பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்த பிரச்சினையை அறிந்திருப்பதாகவும் தி ஆர்கனைசர் இதழ் குறிப்பிட்டு இருந்தது.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ, அனாதை இல்லங்கள் மூலம் சட்டவிரோதமாக மதமாற்றங்கள் செய்யப்பட்டு அமேசான் நிதியளிப்பதாகக் கூறப்படும் மதமாற்றங்கள் குறித்து அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து செப்டம்பரில் கமிஷனுக்கு புகார் வந்ததாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் உடனடியாக விஷயத்தை அறிந்து, செப்டம்பர் மாதம் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அமேசான் பதிலளிக்கவில்லை… பின்னர் நான் அமேசானுக்கு அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பினேன். மேலும் மூன்று அமேசான் இந்தியா அதிகாரிகளை நவம்பர் 1 அன்று கமிஷன் அலுவலகத்தில் சந்தித்தேன்.

அமேசான் இந்தியாவிற்கும் ஆல் இந்தியா மிஷனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அமேசான் இந்தியாவிலிருந்து அரசு சாரா நிறுவனத்திற்கு எந்தப் பணமும் செல்வதில்லை என்றும் அமேசான் பிரதிநிதிகள் எங்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அமேசான் அமெரிக்காவைச் சரிபார்த்து, நவம்பர் முதல் வாரத்தில் எங்களிடம் திரும்பினார்கள். அமேசான் இந்தியா, அமேசான் அமெரிக்கா, அகில இந்திய மிஷனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்ததாகக் கூறியது. வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிகிற அகில இந்திய மிஷனுக்கான முகவரியையும் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இப்போது அகில இந்திய மிஷனை மேலும் விசாரிப்போம்." என்று கூறினார்.

NCPCR இன் விசாரணையின் போது, ​​"அனைத்திந்திய மிஷன் இந்தியாவில் சட்டவிரோதமாக அனாதை இல்லங்களை நடத்தி வருகிறது" என்றும், "அவர்கள் இந்த அனாதை இல்லங்கள் மூலம் குழந்தைகளை மதமாற்றம் செய்கிறார்கள்" என்றும் கமிஷன் உறுதிசெய்தது என்று கனூங்கோ கூறினார். “நாங்கள் அகில இந்திய மிஷனை விசாரிக்க முயற்சித்தோம். ஆனால் அவர்களிடம் முகவரி இல்லை. நாங்கள் தளத்தை விசாரிக்கத் தொடங்கியபோது, ​​​​தளம் தடுக்கப்பட்டது. மேலும் நாங்கள் விசாரணையை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் AIM இணையதளம் அணுக முடியாததாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அதன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஐடிக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஏபிஎம் பதிலளிக்கவில்லை. அதன் செப்டம்பர் அறிக்கையில், தி ஆர்கனைசர் ஜார்கண்டில் AIM க்கு இரண்டு முன்னணிகள் இருப்பதாகவும், அதன் நிறுவனர்கள் "இந்தியாவை மையமாக வைத்து அவதூறு செய்ய இடைவிடாத பிரச்சாரங்களை நடத்தி வருவதாகவும்" கூறியது.

ஆர்எஸ்எஸ்-இன் இணைந்த பத்திரிக்கை இதழ் அல்லது அமைப்பு அமேசான் மீது தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. நிறுவனம் சில்லறை சந்தையை கார்ட்டலைஸ் செய்வதாக அவர்கள் முன்பு குற்றம் சாட்டி இருந்தனர். இது சங்பரிவார் மற்றும் பாஜகவின் பாரம்பரிய ஆதரவு தளமான சிறு வியாபாரிகளை பாதித்துள்ளது.

செப்டம்பர் 2021ல், “பாஞ்சஜன்யா” அமேசானை கிழக்கிந்திய நிறுவனத்துடன் இணைத்து ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டது.

டிசம்பர் 2021ல், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (SJM) அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகள் "அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள் மற்றும் கிரானா கடைகளை மோசமாக பாதிக்கின்றன" என்று மன்ச் குறிப்பிட்டு இருந்தது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Amazon Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment