Advertisment

கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
கொரோனா தடுப்பூசி :  வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று பாதிப்பு உலகளவில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. தற்போதுவரை தனது தாக்குதலை தொடர்ந்து வரும் இந்த வைரஸ் ஒரு சில நாடுகளில் தனது 2-வது மற்றும் 3-வது அலையை தொடர்ந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இதில் முதல் ஆளாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த இந்திய கடந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது.

Advertisment

மேலும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், உலகநாடுகள் சிலவற்றிற்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த தடுப்பு மருந்து செலுத்தக்கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் வருவதாகவும், நோய் எதிப்பு சக்தி குறைந்து வருவதாகவும் சில மர்மநபர்கள் வதந்திகள் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் தடுப்பு மருந்து குறித்து வதந்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்பு மருந்து குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது பேரழிவு மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டவை என்பதைக் "நாட்டில் உள்ள தேசிய ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது என்பதை நான் உறுதியாக வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து சில மர்மநபர்கள், சமூக வலைதளங்களில், ஆதாரமற்ற மற்றும் தவறான வதந்திகளை பரவி வருகின்றனர்.  இதனால் மக்களுக்கு இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகம் உருவாகிறது இதனால், தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் தொடர்பான அனைத்து வகையான சோதனைகளையும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என எழுதியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக இருப்பதற்கும், “தொற்றுநோய் ஒழிக்கப்படுவதற்கும்” தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக தனது கடித்த்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற தவறான தகவல் வதந்திகள் பரப்புவபவர்களுக்கு இணையாக, உண்மைச் செய்திகளை உடனடியாகப் பரப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தள்ளார். வதந்திகள் பரப்புவோர் மீது பேரழிவு மேலாண்மை சட்டம், 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், 1860 ஆகிய சட்டத்தின் கீழ், தண்டனை நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Covaxin And Covishield
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment