சபரிமலை மறுசீராய்வு மனுக்களை எப்போது விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் ?

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் நாளை இது குறித்த தகவல்களை வெளியிடும் என எதிர்பார்ப்பு...

சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என செப்டம்பர் மாதம் 28ம் தேதி முக்கிய தீர்ப்பினை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.  ஆனால் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பக்தர்கள், பந்தளம் ராஜ குடும்பத்தினர், மற்றும் கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோவிலின் நடை 17ம் தேதி மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

சபரிமலை கோவிலுக்குள் நுழைவதற்காக சில பெண்கள் முயன்றனர். ஆனால் கோவில் முன் போராட்டத்தில் இருந்த பக்தர்கள் அவர்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் “உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நிச்சயமாக பின்பற்றுவோம் என்றும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர் தான் சபரிமலைக்கு உண்டான தனித்துவத்தினையும் வரலாற்றினையும் மாற்ற முற்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் “இங்கு இந்த ஐந்து நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை விரிவாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறது.

கோவில் நிர்வாகம் மற்றும் தலைமை தந்திரி “சந்நிதானத்தில் பெண்கள் நுழைந்தால் கோவிலை இழுத்து மூடிவிடுவோம்” என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்மாநில அமைச்சர்கள் தந்திரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பினை மறுசீராய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறு சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் மேத்யூஸ் ஜெ. நெடும்பரா மனு அளித்தார். அதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மற்றும் எஸ்.கே. கவுல் அடங்கிய அமர்வு நீதிமன்றம், நாளை இது குறித்த முக்கிய முடிவினை எடுப்போம் என கூறியிருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அந்த மறுசீராய்வு மனுக்களில் ஒன்று தேசிய ஐயப்ப பக்தர்கள் அசோசியேசனின் மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 17ம் தேதி திறந்த ஐயப்பன் கோவிலின் நடை இன்று இரவு 10 மணியோடு மூடப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close