Advertisment

சொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்!

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உட்பட நான்கு பேருக்கும் ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்!

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இவ்வழக்கில் இருந்து நடராஜன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994-ம் ஆண்டு புதிய லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை, பயன்படுத்திய கார் என கூறி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்தார். சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ 1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.

உடல்நலக்குறைவால் உடனே சரணடைவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என நடராஜன் மற்றும் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்கள் கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி விசாரித்த நீதிபதி தீபக் குப்தா, நடராஜன் மற்றும் பாஸ்கரன் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இந்த மனு மீதான விரிவான விசாரணையை இன்றைய தேதிக்கு(டிச.,15) ஒத்தி வைத்தும் அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.25 லட்சத்தை பிணைத் தொகையாக செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment