Advertisment

SBI PO Prelims Result 2018: எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

SBI PO Prelims Result 2018: தேர்வு முடிவுகளை www.sbi.co.in மற்றும் bank.sbi.careers இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI PO results

SBI PO results

SBI PO Prelims Result 2018: கடந்த ஞாயிறு அன்று, எஸ்.பி.ஐ பிஓ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisment

தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை www.sbi.co.in மற்றும் bank.sbi.careers இணைய தளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அனைத்தும் மெரிட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும். அவர்களுக்கான முக்கியத் தேர்வு (Mains) ஆகஸ்ட் மாதம் 4ம் தேதியில் இருந்து உள்ளது.

அதற்கான அழைப்புக் கடிதம் வருகின்ற ஜூலை 20ல் இருந்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் ஏப்ரல் 21ல் இருந்து வரவேற்கப்பட்டன.

முதன்மை தேர்வுகள் ஜூலை 1, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்று, அதன் முடிவுகள் ஜூலை 16ம் தேதி வெளியிடப்பட்டது.

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தேர்வுத் தாள்கள் மிகவும் கடினமாக உருவாக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை எப்படி அறிந்து கொள்வது?

1. மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்

2. கேரியர் செக்சனை தேர்வு செய்யவும்

3. அதில் 'latest announcement' என்பதற்கு கீழே இருக்கும் 'SBI PO prelims result 2018' என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்

4. அதைத் தொடர்ந்து வரும் பிடிஎஃப்பில் தேர்வில் வென்றவர்களின் தேர்வு எண் மற்றும் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்

எஸ்.பி.ஐ பிஓ முக்கியத் தேர்வு (Mains) பேட்டர்ன்:

200 மதிப்பெண்களுக்காக எழுதப்படும் ஆன்லைன் தேர்வு இது. மொத்தம் நான்கு பிரிவுகள் அதில் இருக்கின்றன.  ஒவ்வொரு பிரிவிலும் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை.

ரீசனிங் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் (Reasoning and Computer Aptitude): 45 கேள்விகள் - 60 நிமிடங்கள்

டேட்டா அனலிசிஸ் மற்றும் இண்டெர்ப்ரிடேஷன் (Data Analysis and Interpretation): 35 கேள்விகள் - 45 நிமிடங்கள்

ஜெனரல் / எக்கனாமி / பேங்கிங் அவெர்னெஸ் ( General/ Economy/ Banking Awareness): 40 கேள்விகள் - 35 நிமிடங்கள்

ஆங்கில மொழித் தேர்வு :  35 கேள்விகள் - 40 நிமிடங்கள்

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment