Advertisment

ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து ‘தேசிய திட்டம்’ : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

SC asks Centre to show ‘national plan’ on oxygen supply, vaccination method: ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து ‘தேசிய திட்டம்’ உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து ‘தேசிய திட்டம்’ : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புகளை அறிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய அளவிலான கொள்கையை அமல்படுத்துமாறு வியாழக்கிழமை அன்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisment

விசாரணையின் போது, ​​கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஊரடங்கை அறிவிக்க உயர் நீதிமன்றங்களின் நீதி அதிகாரத்தை ஆராய்வோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக செவ்வாய் கிழமையன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த "உத்தரபிரதேசத்தின் ஐந்து முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட முழுமையான ஊரடங்கு" என்ற உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, நீதியரசர் எல்.என்.ராவ் மற்றும் நீதியரசர் எஸ்.ஆர்.பட் அடங்கிய அமர்வு இது தொடர்பான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆறு உயர்நீதிமன்றங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறைகள் தொடர்பான மனுக்களை விசாரித்து வரும் நேரத்தில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. COVID-19 நிர்வாகம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இந்த வழக்கில் உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை சட்ட ஆலோசகராக  உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளுடன், இந்தியா உலகளாவிய சாதனை படைத்த ஒரு நாளில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. கோவிட் தொற்றுகளின் பாதிப்புகளில் உலகின் மிகப்பெரிய எழுச்சியை இந்தியா கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Supreme Court Lack Of Oxygen Supply
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment