Advertisment

மீஷா புத்தகத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

எழுத்தாளர்களின் கற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது - தலைமை நீதிபதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீஷா, ஹரீஷ், மலையாள புத்தகம்

மீஷா

மீஷா புத்தகத்திற்கு தடை விதிக்க முடியாது : கேரளாவின் கிழக்கு மாவட்டமான குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஹரீஷ். அவருடைய சிறுகதைகள் மிகவும் பிரபலமானவை மற்றும் மலையாள இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் ஹரீஷ் என்றாலும் அது உண்மைதான்.

Advertisment

யாரிந்த ஹரீஷ்?

எதையுமே கூர்ந்து சிந்தித்து, அதை மிகவும் நுணுக்கமாகவும் அதே நேரத்தில் தீர்க்கமாகவும் எழுதும் பண்புடையவர் ஹரீஷ். அரசியல் தளங்களிலும், அன்றாட வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளை அவர் கதைகளின் கருவாக பயன்படுத்துவார்.

இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம் (1998) (Rasavidyayude Charitram), ஆதாம் 2014, அப்பன் (2018) என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். ஆதாம் படைப்பிற்காக கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் ஹரீஷ்.

தற்போது வெளி வந்திருக்கும் அவருடைய புத்தகத்தகமான மீஷாவிற்கு (மீசை) தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த புத்தகத்தில் வரும் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

To read this article in English 

இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு புத்தகத்திற்கு தடை விதிக்க இயலாது என்று கூறி தீர்ப்பளித்தது.

மீஷா புத்தகத்தில் சில கட்சிகளை நீக்க வேண்டும்

இந்த புத்தகத்தில் இந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று டெல்லியில் வசித்து வரும் ராதா கிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பகுதியில் பிராமணர்களுக்கு எதிராகவும் பாகுபாட்டினை விளைவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தடை விதிக்க முடியாது

இதை விசாரித்த நீதிபதிகள் இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது அதே போல் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது என்று கூறி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மாத்ரூபூமி இதழில் தொடராக வெளிவந்த இந்த கதைக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் தொடர் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment