சபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா ?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...

சபரிமலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு :  கேரளாவின் புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலமான சபரிமலையில் பல நுற்றாண்டுகளாக பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பூப்பெய்தும் காலம் தொடங்கி 50 வயது வரை கோவிலுக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளும், 50 வயதிற்கு மேற்பட்ட முதிய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுதலுக்கு தடை ஏதும் இல்லை.

சபரிமலை பெண்கள் வழிபாடு

இதற்கு முன்பு கேரளா உயர் நீதிமன்றம் ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தலாமா என்பது தொடர்பாக முக்கியமான தீர்ப்பினை வெளியிட்டது. அதில் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நடைமுறையை மாற்றிவிட இயலாது. மேலும் இது தொடர்பான முடிவுகளை நிச்சயமாக அக்கோவிலின் தலைமை பூசாரி (தந்திரி) தான் எடுக்க வேண்டும் என்று கூறியது.

இதனைத் தொடர்ந்து மாதவிடாயினை காரணம் காட்டி பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து 5 பெண் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை பதிவு செய்தனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இன்றைய தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணையின் போது ஐந்து வழக்கறிஞர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ”பெண்களை ஆலயத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பது என்பது அரசியல் சாசனம் 14, 15, மற்றும் 17ற்கு எதிரானது” என்று வாதிட்டார்.

ஜூலை மாதம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். எட்டு நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு ”ஒரு பெண் தெய்வ வழிபாடு நடத்துவதற்கு எந்த சட்டத்தினையும் நம்ப வேண்டாம். அது அவளின் உரிமை” என்று கருத்தினை வெளியிட்டது.

லைவ் அப்டேட்டினைப் பெற 

சபரிமலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் பெண்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பினை வழங்கினார்கள்.  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய தீர்ப்பில் பக்தி என்பது தீண்டாமைக்கு வழி வகுக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் ஆன் வழிச் சமூக சிந்தனைகளும் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும். வழிபாடு போன்ற விசயங்களில் பாலியல் வேறுபாடுகளை கருத்தில் கொண்டு அனுமதியை மறுப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறினார்.

நீதிபதி கான்வில்கர் கேரள மக்களின் இந்து வழிபாட்டுத் தளங்கள் விதிமுறைகள் 1965 இந்து பெண்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறினார். வயதை காரணம் காட்டி தடை விதிப்பதை ஒரு மத வழிமுறையாக பின்பற்றுதல் கூடாது என்று கூறினார்.

இதே விதிமுறைகளை எடுத்துக் கூடி நீதிபதி நரிமன் “இது பெண்களின் அடிப்படை உரிமை” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் “பெண்கள் அவர்களின் இனப்பெருக்க காலங்களை வைத்து அவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது தவறு. 10 வயதில் இருந்து 50 வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது அவர்களுக்கு அவமரியாதையை உருவாக்குவதாகும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க :  தீர்ப்பினை வரவேற்ற கனிமொழி

சபரிமலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட கருத்து

“ஒரு மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் நீதிமன்றங்கள் மாற்றி அமைக்க முயலக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் பகுத்தறிவு கருத்துகளை மதங்களுக்குள் திணிக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒரு மதத்தில் எதை பின்பற்ற வேண்டும் என்பதை அந்த மதத்தினை சார்ந்தவர்களே முடிவு செய்வார்கள். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. அவரவர் மத நம்பிக்கைகளை முழு சுதந்திரத்துடன் பின்பற்ற அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது. இதனால் இது போன்ற விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது” என்று தன் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார் இந்து மல்ஹோத்ரா.

இந்து மல்ஹோத்ராவின் முழுமையான தீர்ப்பினையும் படிக்க

தேவஸ்தானம் மற்றும் ஐயப்ப தர்ம சேனாவின் கருத்து

திருவான்கூர் தேவஸ்வோம் போர்டின் பிரஸிடெண்ட் பத்மகுமார் இது குறித்து பேசும் போது “ தற்போது நடைமுறையில் இருக்கும் நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டோம். ஆனால் தீர்ப்பு வெறொரு விதமாக அமைந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும். அதன் பின்னரே எந்த முடிவினையும் எடுக்க இயலும்” என்று கூறினார்.

மறுசீராய்வு மனு அனுப்ப ஐயப்ப தர்ம சேனா முடிவு செய்துள்ளது. இதனை ஐயப்பன் கோவிலின் முன்னாள் பூசாரியின் பேரன் ஈஸ்வர் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவு எங்களுக்கு பெரிய வருத்தத்தினை தெரிவித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close