Advertisment

நமீபியா சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வர உதவிய மூத்த அதிகாரிக்கு பணிக்குழுவில் இடம் இல்லை

13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சிறுத்தை திட்டத்தில் முன்னணியில் இருந்த உயிரியலாளர் யாதவேந்திரதேவ் விக்ரம்சிங் ஜாலாவுக்கு சிறுத்தைகள் கண்காணிக்கும் பணிக்குழுவில் இடம் அளிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
நமீபியா சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வர உதவிய மூத்த அதிகாரிக்கு பணிக்குழுவில் இடம் இல்லை

லாடாய் மற்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் ஜாலா (நடுவில்)

13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சிறுத்தை திட்டத்தில் முன்னணியில் இருந்து, கடந்த மாதம் நமீபியாவிலிருந்து சிறுத்தைகளை கொண்டு வர உதவிய உயிரியலாளர், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் டீன் யாதவேந்திரதேவ் விக்ரம்சிங் ஜாலாவுக்கு அரசாங்கத்தின் புதிய சீட்டா டாஸ்க் ஃபோர்ஸ் (New Cheetah Task Force) பணியில் இடம் அளிக்கவில்லை.

Advertisment

2009ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்த அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் சிறுத்தை திட்டத்தில் பணியாற்றியவர். 2010ஆம் ஆண்டு பாதுகாவலர் எம்.கே.ரஞ்சித்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட சீட்டா டாஸ்க் ஃபோர்ஸில் உறுப்பினராக இருந்தவர்.

செப்டம்பர் 16ஆம் தேதி, நமீபியாவில் இருந்து சிறுத்தைகளை ​​குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரும் பணியில் ஜாலா ஈடுபட்டார். அங்கு அவரது பராமரிப்பில் சிறுத்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. விடுப்பில் செல்வதற்கு முன் குனோவில் சிறுத்தைகளை ஒரு வாரம் அவர் கண்காணித்து வந்தார். புதிய சீட்டா டாஸ்க் ஃபோர்ஸ் பணிகள் குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான முதல் அறிக்கையை ரஞ்சித்சிங் உடன் இருந்து ஜாலா தயாரித்து, அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வழங்கினர்.

ஜனவரி 2022இல், இந்தியா சீட்டா செயல் திட்டத்தை இறுதி செய்தபோது அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். ஜாலா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளர்களுடன்

சிறுத்தைகளை கொண்டு வர தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கினார்.

இந்தநிலையில், செப்டம்பர் 20அன்று, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை கண்காணிக்க, அதற்கான அடுத்த கட்டப் பணிகளை செய்ய 9 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 8 சிறுத்தைகளை கண்காணித்து, எப்போது அவற்றை திறந்த வெளியில் விடுவிக்கலாம், பராமரிப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கும். அரசின் இந்த பணிக்குழுவில் ஜாலா இடம்பெறவில்லை.

ஜாலா குழுவில் இடம்பெறாதது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டதற்கு, புதிய பணிக்குழுவை அமைப்பது அல்லது அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று ரஞ்சித்சிங் கூறினார்.

என்டிசிஏ உறுப்பினர்-செயலாளர் எஸ்.பி யாதவிடம் பணிக்குழுவில் யாதவ் இல்லாதது குறித்து கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். யாதவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜாலாவின் இருப்பு ஒரு மோதலாக இருக்கலாம். புதிய பணிக்குழுவின் ஆணை, திட்டத்தை கண்காணிப்பதாகும். அதனால் ஜாலாவால் தனது சொந்த வேலையை கண்காணிக்க முடியாது என்றார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், "பணிக்குழுவின் ஆணை மிகவும் தொழில்நுட்பமானது மற்றும் அதில் தொழில்நுட்ப உறுப்பினர் யாரும் இல்லை. பணிக்குழுவின் பணி சிறுத்தைகளை கண்காணிப்பதே ஆகும்" என்றார்.

நமீபியா சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்தில் ஜாலா சில தவறுகள் செய்ததாக கூறப்படுகிறது. குவாலியரில் இருந்து குனோவிற்கு சிறுத்தைகளை சினூக்கில் கொண்டு செல்ல அவர் மறுத்துவிட்டார். சிறுத்தைகளை அதிக நேரம் சத்தத்திலிருந்து பாதுகாப்பது ஆபத்தானது. இதில் அவர் தவறு செய்ததாக கூறுகின்றனர். சிறுத்தைகள் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்களில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அதில் அவர் பயணம் செய்தார். சிலர் சினூக்கில் பயணம் செய்தனர் என்று திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

அதேபோல், செப்டம்பர் 17அன்று பிரதமர் மோடி சிறுத்தைகளை குனோ பூங்காவில் விடுவித்தார். அப்போது அவருடன் 20 நபர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் புகைப்படம் எடுப்பதற்கான பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பட்டியலில் ஜாலா பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து என்டிசிஏ மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, ​​“இவைகள் நடக்கின்றன. இவர் மட்டும் இதில் விடுபட வில்லை" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment