Advertisment

செகந்தராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தீ விபத்து : விடுதியில் இருந்த 8 பேர் பலி

முதற்கட்ட விசாரணையில், 40 எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பாதாள அறையில் இருந்து தீ பிடித்தது தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
செகந்தராபாத்  எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தீ விபத்து : விடுதியில் இருந்த 8 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிபத்தின்போது ஏற்பட்ட புகை மூட்டத்தினால், அருகில் இருந்த விடுதியில் தங்கியிருந்த நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக கூறப்படுகிறது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் செகந்தாராபாத் நகரில் செயல்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில். வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும்போது மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ அருகில் இருந்த தங்கும் விடுதிக்கும் பரவியதை தொடர்ந்து அங்கு 8 பேர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர் 25 பேர் தங்கியிருந்த அந்த விடுதியில் உயிரை காப்பாற்றிக்கொள்ள சில மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில், அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் எம்டி மஹ்மூத் அலி ஆகியோர் இரவு நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் கூறுகையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், தீ மளமளவென மேல்நோக்கி விடுதிக்குள் பரவியதால், அங்கு தங்கியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டு்ளளனர் என்று கூறியுள்ளார்.

publive-image

இது குறித்து மார்க்கெட் காவல் நிலையத்தின் SHO ஒய் நாகேஷ்வர் ராவ்,  indianexpress.com இடம் கூறுகையில். தரைத்தளம் மற்றும் மேலே உள்ள தங்கும் விடுதியில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் வைத்திருக்கும் கட்டிட உரிமையாளர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது விடுதியின் நான்கு மாடிகளில் 25 நபர்கள் இருந்தனர், அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருந்ததால் விரைவாக கீழே வரமுடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ராஜேந்தர் சிங் பக்கா மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இதனிடையே இந்த தீ விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், 40 எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பாதாள அறையில் இருந்து தீ பிடித்தது தெரியவந்தது. இந்த பைக்குகள் மாலையில் சார்ஜ் இணைப்பை வைத்துவிட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இரவு 9.37 மணிக்கு தீயணைப்பு அவசர அழைப்பு வந்தது மற்றும் இரண்டு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. குறைந்தபட்சம் 25 பேர் கட்டிடத்தில் சிக்கியுள்ளதாகவும், பாதாள அறையில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியதாகவும் தெரிவித்தனர். மேலும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தெளிப்பான்கள் இயக்கப்படவில்லை இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலுங்கானா அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் அறிவித்துள்ளார்.

கட்டிடத்தில் சிக்கியிருந்த 25 பேரில், சுமார் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,, அவர்களில் இருவர் ஜன்னல் வழியாக குதித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஏணிகளைப் பயன்படுத்தி ஆறு பேரைக் காப்பாற்றினர் மற்றும் புகையை சுவாசித்த இரண்டு நபர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் சிலர் சென்னை, புது தில்லி, கொல்கத்தா மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fire Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment