தனது தந்தையால் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால் சனிக்கிழமை (மார்ச் 11) கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமது தந்தையின் செய்கைக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “எனது தந்தை என்னை கொடுமைப்படுத்துவார். அடித்து துன்புறுத்துவார். பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வார்.
நான் பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். மேலும், இதுபோன்ற ஆண்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தேன். பெண்கள் அவர்களுக்கு தகுதியானதை பெற வேண்டும் என நினைத்தேன்” என்றார்.
மேலும், இது தாம் 4ஆம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது என்றார். மேலும், “விருது பெற்ற மற்ற பெண்களுக்கும் இதே போன்ற கதை இருக்க வேண்டும்.
இவர்கள், வாழ்க்கையை நேர்மறையாக வாழ எங்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்,” என்றார்.
சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/