Advertisment

ஷாஹீன் பாக் போராட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடியுமா என பாருங்கள் - உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை கவலை எழுப்பியுள்ளது. மேலும், போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என்றும் வியப்பை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shaheen bagh protest, supreme court shaheen bagh protests, ஷாஹீன் பாக் போராட்டம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம், உச்ச நீதிமன்றம் கருத்து, shaheen bagh protests, sc order on shaheen bagh protests, caa protests delhi, supreme court news

shaheen bagh protest, supreme court shaheen bagh protests, ஷாஹீன் பாக் போராட்டம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம், உச்ச நீதிமன்றம் கருத்து, shaheen bagh protests, sc order on shaheen bagh protests, caa protests delhi, supreme court news

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை கவலை எழுப்பியுள்ளது. மேலும், போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என்றும் வியப்பை தெரிவித்துள்ளது.

Advertisment

“நாங்கள் மக்கள் தங்கள் கவலைகளைப் பற்றி தெரிவிக்க உரிமை இல்லை என்று கூறவில்லை. எங்கே போராடுவது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், இந்த சட்டத்திற்காக இன்று சாலைகளில் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்தால், நாளை அதை மற்றொரு சட்டத்திற்காக செய்ய முடியும்” என்று நீதிபதி கவுல் கூறினார்.

கடந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், போராட்டங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் நடத்தப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் பொது சாலைகளை மறிக்க கூடாது. மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கூறியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசம் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் பொது சாலைகளைத் தடுக்க கூடாது. அத்தகைய பகுதியில் காலவரையின்றி போராட்டம் நடத்த முடியாது. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், அந்த போராட்டம் அது போராட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருக்க வேண்டும். நீங்கள் மக்களுக்கு சிரமத்தை உருவாக்க கூடாது” என்று கூறினர்.

“ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை எதிர்த்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புவது நல்லது. பல நாட்களாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன… நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு பகுதியில் இருக்க வேண்டும். ஒருவர் எங்கு வேண்டுமானாலும் அதை நடத்த முடியாது. போராட்டம் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருக்க வேண்டும்… இல்லையென்றால், மக்கள் எங்குவேண்டுமானலும் சென்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள். குடிமக்களின் ஆர்வத்தில் செலவில் போராட்டம் நடத்தக் கூடாது” என்று நீதிபதி கவுல் கூறினார்.

போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து சீர்குலைவு தொடர்பாக வழக்கறிஞர் அமித் சாஹ்னி மற்றும் டெல்லி பாஜக தலைவர் நந்த் கிஷோர் கார்க் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது.

கார்க் சார்பில் ஆஜரான வக்கீல் சஷாங்க் தியோ சுதி, நீதிமன்றத்தை இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு வலியுறுத்தினார். இப்போது பல நாட்களாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும், நீதிபதிகள் அமர்வு அவருடைய கோரிக்கையை நிராகரித்தது. மேலும், "நீங்கள் 50 நாட்களுக்கு மேல் காத்திருந்தீர்கள் என்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம்” என்று கூறினர்.

காளிந்தி குஞ்ச்-ஷாஹீன் பாக் நீரோட்டத்தில் சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்ய டெல்லி காவல்துறையினருக்கு உத்தரவு கோரி சாஹ்னி முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இது குறித்து விசாரிக்குமாறு ஐகோர்ட் பொலிஸாரிடம் கோரியிருந்தது.

கலிந்தி கஞ்ச் - ஷாஹீன் பாக் சாலையில் சுமூகமான போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்ய டெல்லி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி சாஹ்னி டெல்லி உயர் நீதிமன்றத்தை அனுகியிருந்தார். இது குறித்து விசாரிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேட்டிருந்தது.

கார்க், தனது மனுவில், சட்ட அமலாக்க இயந்திரங்கள் போராட்டக்காரர்களின் விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளன என்றும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுக்க நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரினார்.

நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும் பெண்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் செயல்படுத்த முன்மொழியப்பட்டதை எதிர்த்தும் ஷாஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Delhi Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment