Advertisment

உளவு கப்பல் விவகாரம்.. 'முழுமையான தலையீடு' என சாடிய சீனா.. இந்தியா பதிலடி

சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் வந்து சென்றது.

author-image
WebDesk
New Update
உளவு கப்பல் விவகாரம்..  'முழுமையான தலையீடு' என சாடிய சீனா.. இந்தியா பதிலடி

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வாரம் அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி புறப்பட்டு சென்றது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதர், இந்தியா குறித்து மறைமுகமாக சாடியுள்ளார். இலங்கையின் இறையாண்மையில் "முழுமையான தலையீடு" என்று குற்றஞ்சாட்டி நிலையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வரவுள்ளத்தை அறிந்த இந்தியா, முன்பே இலங்கையிடம் கவலை தெரிவித்தது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தலாக இருக்கம் என தெரிவித்தது. இதையடுத்து, இலங்கை சீனாவிற்கு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு கடிதம் அனுப்பியது. இருப்பினும் கோரிக்கை ஏற்க சீனா மறுத்தது. முன்பு ஆகஸ்ட் 11 முதல் 17 வரை கப்பல் இலங்கை வந்த செல்ல இருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக ஆகஸ்ட் 16 முதல் 22 வரை இலங்கையின்

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை இலங்கை வர இருந்ததை ஆகஸ்ட் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சென்றது.

இலங்கைக்கான சீன தூதர் குய் சென்ஹாங் கூறுகையில், இலங்கையின் சிறந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​இலங்கை அதன் வடக்கு அண்டை நாட்டிலிருந்து 17 முறை ஆக்கிரமிப்புகளை வென்றது. கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக பயங்கரவாத எதிர்ப்புப் போர். இப்போதும் உலகில் தைரியமாகவும் பெருமையாகவும் நிற்கிறது. இலங்கையின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான எந்தவொரு மீறலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

யுவான் வாங் 5 குறித்து பேசுகையில், "ஹம்பாந்தோட்டை அல்லது வேறு எந்த துறைமுகத்திலும் வெளிநாட்டுக் கப்பலின் வருகை அங்கீகரிப்பது இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக அதன் இறையாண்மைக்குள் எடுக்கப்பட்ட முடிவாகும். யுவான் வாங் 5 கப்பலால் 'பாதுகாப்புக் கவலைகள்' என்று எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியில் இருந்து கூறுவது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் ஒரு முழுமையான தலையீடு ஆகும்.

அதிர்ஷ்டவசமாக, சீனா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியுடன், இது சரி செய்யப்பட்டது. இது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சர்வதேச நியாயத்தையும் நீதியையும் மீண்டும் ஒருமுறை பாதுகாக்கிறது” என சீன தூதர் கூறினார்.

"இலங்கையைப் போலவே, சீனாவும் 1840 முதல் 1949 வரை நூறு ஆண்டுகள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் சீனா இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அதைத் தொடர்ந்து செய்வோம்.

இந்த நிலையில், தொலைதூரத்தில் அல்லது அருகில் உள்ள சில நாடுகள், இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் மீண்டும் மீண்டும் தலையிடுகிறது மற்றும் பல்வேறு ஆதாரமற்ற காரணங்களை கூறுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சீனாவிற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டது. அதில், "சீன தூதரின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம். சீன தூதர் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை மீறி இருக்கிறார். இலங்கையின் அண்டை நாடுகள் பற்றிய அவரது பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதன் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தியா அப்படியானது இல்லை. இந்தியா மிகவும் வித்தியாசமானது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடன் பிரச்சனை உள்ளது. இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான். மற்றொரு நாட்டின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்கிற தேவையற்ற அழுத்தங்கள், சர்ச்சைகள் இலங்கைக்கு தேவை இல்லை" என இந்தியா தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா 4 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், மளிகை பொருட்கள் அனுப்பி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment