Advertisment

மகாராஷ்டிராவிலும் கூவத்தூர் பார்முலா : ஜெயிக்கப்போவது பா.ஜ.,வா இல்லை சிவசேனாவா?...

Maharashtra deadlock : சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள், பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடம் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா கூவத்தூர் பார்முலாவை கையில் எடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maharashtra government formation, shiv sena, bjp, uddhav thackeray, shiv sena mlas hotel, bjp calls governor, maharashtra governor, mumbai news, devendra fadnavis, indian express

maharashtra government formation, shiv sena, bjp, uddhav thackeray, shiv sena mlas hotel, bjp calls governor, maharashtra governor, mumbai news, devendra fadnavis, indian express மகாராஷ்டிரா, அரசியல், பா.ஜ., சிவசேனா, உத்தவ் தாக்ரே, கவர்னர் சந்திப்பு, மும்பை

சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள், பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடம் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா கூவத்தூர் பார்முலாவை கையில் எடுத்துள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பா.ஜ., வும், 56 இடங்களில் சிவசேனாவும் காங்கிரஸ் 44 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.,வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டது.

முதல்வர் பதவியில் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்றும் அதிலும் முதல் இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சியினர்தான் ஆள வேண்டும் என்றும் சிவசேனா கண்டிஷன் போட்டது. இதை பா.ஜ., ஏற்க மறுத்துவிட்டது.

கெடு : இந்த நிலையில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. அது முடியாமல் போனது. 8ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கவர்னரை, தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பா.ஜ. கட்சியினர்ச சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் ஆட்சி அமைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் சிவசேனா எம்எல்ஏக்கள் விலை போகாமல் இருக்க மும்பையில் உள்ள ஹோட்டல்களில் இரு நாட்களுக்கு தங்குமாறு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.

கவர்னர் உடனான சந்திப்புக்கு பிறகு பா.ஜ, தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது, கவர்னரை சந்தித்து ஆட்சியைமக்க உரிமை கோரினோம். இதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து இந்த சந்திப்பினிடையே விவாதிக்கப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி, ஜனநாயக முறைப்படி நடக்க கவர்னரிடம் கோரப்பட்டதாக அவர் கூறினார்.

அவசர ஆலோசனை : பா.ஜ. கட்சியினருடனான சந்திப்புக்கு பிறகு, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியை சந்தித்துப்பேசினார். புதிய அரசு அமைவதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சிவசேனா திட்டவட்டம் : லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை பா.ஜ., மீறிவருகிறது. தங்களது கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேற கூட தயங்கமாட்டோம்.

சிவசேனா இல்லாமல், பா.ஜ., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதனுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். சட்டசபையில், பா.ஜ.,வை, சபாநாயகர் தேர்தலில் தோற்கடிக்க செய்வோம்.

சிவசேனாவுக்கு தான் முதலில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை. பா.ஜ, தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. கட்சி தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பா.ஜ. உடன் ஆட்சி அமைப்பதோ அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமைவதா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் உத்தவ் தாக்ரேவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பட்னாவிஸ் சிவ்சைனிக் தான் - பா.ஜ., : முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவ்சைனிக் தான். அவரும் சிவசேனா முதல்வர் தான் என்று நிதியமைச்சர் முங்காந்திவார் கூறியிருந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரவுட், சிவ்சைனிக் ஆட்கள், பொய் சொல்லமாட்டார்கள். யாரையும் ஏமாற்றமாட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Bjp Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment