Advertisment

காங்கிரஸ் கூட்டணி என்பது கெட்டுப்போன சமையல்: சிவராஜ் சிங் சவுகான்

`மோடி’என்று சொன்னாலே `சாத்தியமானது’ என்றுதான் அர்த்தம்.

author-image
WebDesk
New Update
Shivraj Singh Chauhan command Alliance with Congress

Shivraj Singh Chauhan command Alliance with Congress

Shivraj Singh Chauhan command Alliance with Congress : தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடந்தது.வெற்றி வேல் யாத்திரையின் நிறைவு விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேறறு (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவுக்கு, எல்.முருகன் தலைமை தாங்கினார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

விழாவில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசியதாவது:

முருகன் மக்களைக் காக்க அசுரர்களை எப்படி அழித்தாரோ, அதுபோல இந்த வேல் யாத்திரை தமிழகத்தில் இருக்கும் அசுர சக்திகளை அழிக்கும். நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் கனவு. எம்ஜிஆரைப் போல நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவின. ஆனால், கரோனாவை எதிர்கொள்வதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். `மோடி’என்று சொன்னாலே `சாத்தியமானது’ என்றுதான் அர்த்தம்.

தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் அளித்துள்ளார்.

விவசாயிகள் உதவித்தொகை திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவற்றால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதற்குமுன்பிருந்த காங்கிரஸ் அரசு இதுவரை செய்யாத அளவுக்கு, சாகர் மாலா திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட்சிட்டிகள்,

மதுரையில் எய்ம்ஸ்,பாதுகாப்பு சார்ந்த தொழில் வழித்தடம் என, பல திட்டங்களை தமிழகத்துக்கு மோடி அரசு தந்துள்ளது. இந்த அரசை, `தமிழர் விரோத அரசு’ என்று எப்படி கூற முடியும்? பிஹாரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் மூழ்கிப் போனதுபோல் தமிழகத்திலும் அக்கட்சியுடன் கூட்டணிவைப்பவர்கள் மூழ்கிப் போவார்கள். எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும். வருங்காலம் பாஜகவுடையது. இதுகுறித்து கட்சியினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் இரவு என்பது திமுகவுடையதாக இருக்கலாம். ஆனால் விடியல் எங்களுடையது என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment