பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து 2 ஆவது நாளே உயிரை பறிக் கொடுத்த உதவி பேராசிரியர்!

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட் டம் பட்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், பாதுகாப்பு படையினர் பதிலுக்கு அவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர். தாக்குதலில் பலியானவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் குறித்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் முகமது ரபி பட் என்ற உதவி பேராசிரியரும் ஒருவர். இவர் இந்த அமைப்பில் கடந்த வெள்ளிக்கிழனை அன்று தான் இணைந்துள்ளார். அமைப்பில் சேர்ந்த இரண்டே நாட்களில் முகமது ரபி பலியான சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ரபி, காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பலகலைக்கழகத்தில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் முகமது ரொம்பவும் பிடித்தமான ஆசிரியராம்.

அவரின் இறப்பு, வகுப்பு மாணவர்களை அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முகமது இயக்கத்தில்ன் சேருவதற்கு கடைசி நாள்ம்வரை கல்லூரிக்கு சென்று பாடம் எடுத்து வந்துள்ளார் சரியாக வெள்ளிக்கிழமை அன்று முகமது வீட்டிற்கு திரும்பாததால் அவரின் பெற்றோர்கள் எல்லா இடத்திலையும் அவரை தேடியுள்ளனர்.

பின்பு, அவர் பயங்கரவாத இயக்கத்தில் தீவிரவாதியாக இணைந்து விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட அவரின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், முகமது அந்த மாதிரியான நபர் கிடையாது என்றும், அவரை யாரோ மூளை சலவை செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள் என்று அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தான் முகமதுவின் தந்தைக்கு செல்ஃபோனில் ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய முகமது ரபி, “என்னை மன்னித்து விடுங்கள். நான் அல்லாவிடம் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் முகமதுக்கு திருமணமும் ஆகியுள்ளது. பாதுகாப்பு படையினரால் முகமது சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி கேட்டதும் அவரின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

×Close
×Close