Advertisment

ஐ.சி.யூ வார்டில் கட்டாயப்படுத்தி நடனம் : சமூக சேவகர் மீது பெண் புகார்

இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை "பூஜாரியின் சோம்பலைத் போக்குவதற்காக விரும்பிதான் நான் அவ்வாறு செய்தேன்

author-image
WebDesk
New Update
ஐ.சி.யூ வார்டில் கட்டாயப்படுத்தி நடனம் : சமூக சேவகர் மீது பெண் புகார்

பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரியை உடல்நலக்குறைவு காரமணாக கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் அவரை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்த சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசாவில் உள்ள பராஜா பழங்குடியினர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் 100 க்கும் மேற்பட்ட நாட்டு விதைகளைப் பாதுகாத்ததற்காகவும் 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற பூஜாரி, சிறுநீரகக் கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் விரைவில் குணமடைய முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், திங்கட்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக அவர் நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவருடன் சேர்ந்து சமூக சேவகர் மம்தா பெஹராவும் அவருடன் நடனமாடினார். இந்த வீடியோ மூலம் அந்த பெண்மணி கட்டாயப்படுத்தி ஆட வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து தற்போது பேசியுள்ள அந்த பெண்மணி. "நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன், ஆனால் அவள் (பெஹெரா) கேட்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வடைந்தேன், ”என்று பூஜாரி கோராபுட் மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான சமூக சேவகர் பெஹெரா மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால், தங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள் என்று பழங்குடியினர் சமூகத்தின் சங்கமான ‘பரஜா சமாஜா’ தலைவர் ஹரிஷ் முதுலி கூறியுள்ளார்.

ஆனால் பூஜாரி ஐசியூவில் அல்லாமல் சிறப்பு கேபினில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனையின் பதிவாளர் (நிர்வாகம்) டாக்டர் அபினாஷ் ரௌத் கூறுகையில், “பூஜாரியை நடனமாடச் செய்ததாகக் கூறப்படும் பெஹரா என்ற, அவரைச் சிறப்பு அறைக்கு அழைத்துச்சென்று பத்மஸ்ரீ விருது பெற்ற அவருடன் செல்பி எடுத்துள்ளார்

அதே சமயம் பெஹராவை தனக்குத் யாரேன்றே தெரியாது என்று பூஜாரியின் உதவியாளர் ரஜீப் ஹியால் கூறியுள்ளார். இதனிடையே நடனமாடியது தொடர்பான பெஹெராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை "பூஜாரியின் சோம்பலைத் போக்குவதற்காக விரும்பிதான் நான் அவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment