Advertisment

மே 20ஆம் தேதி விழா: மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு; கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் சித்த ராமையா!

Karnataka government formation: கர்நாடகாவின் அடுத்த முதல்வராகவும், துணை முதல்வராகவும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவரும் சனிக்கிழமை (மே 20) மதியம் 12:30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Siddaramaiah Shivakumar meet Governor stake claim to form govt

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்-ஐ சந்தித்து ஆட்சியமைக்க சித்த ராமையா உரிமை கோரினார். அருகில் டி.கே. சிவக்குமார் உள்ளார்.

Karnataka government formation: கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்த ராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டைவியாழக்கிழமை (மே 18) சந்தித்தனர்.

Advertisment

தொடர்ந்து, அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினர். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவராக சித்த ராமையாவை முறையாகத் தேர்ந்தெடுத்த பிறகு இது நடந்துள்ளது. இவர்களின் கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமை (மே 20) இருவருக்கும் ஆளுனர் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இந்த பதவியேற்பு விழாவைக் கருதலாம். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

75 வயதான சித்த ராமையா, முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவகவுடா (91), முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறார். இதற்கிடையில், கேபிசிசி தலைவராகவும், கனகபுரா தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாகவும் இருந்த டிகே சிவக்குமார், கர்நாடகாவில் கட்சியின் வெற்றியின் பின்னணியில் சிற்பியாகக் கருதப்படுகிறார்.

இந்த நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வராகவும், துணை முதல்வராகவும் சித்த ராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவரும் சனிக்கிழமை (மே 20) மதியம் 12:30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siddaramaiah Dk Shivakumar Karnataka Election Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment