Advertisment

பாகிஸ்தானில் சீக்கியர் ஒருவர் கொலை : சிறுபான்மையிருக்கு பாதுகாப்பு அளிக்க இந்தியா அறிவுரை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குருத்துவாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sikh killed India tells Pakistan guard minorities

Sikh killed India tells Pakistan guard minorities

Sikh killed India tells Pakistan guard minorities : பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது இந்திய அரசு. நன்கானா சாஹிப் குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து சீக்கிய மதத்தை சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவர் கொல்லப்பட்டார். இதற்கு கடுமையான கண்டனங்களை வெளியுறவுத்துறை அமைச்சரவை கடுமையான கண்டனங்களாஇ பதிவு செய்தது. மேலும் சீக்கிய பெண் ஜக்கித் கௌர் என்பவரை கடத்திச் சென்று, இஸ்லாமியராக மாற்ற முயற்சி செய்து, திருமணம் செய்ய முற்பட்டது தொடர்பாகவும், ஸ்ரீ ஜனம் அஸ்தான் குருத்வாராவில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கும் எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.

Advertisment

மேலும் பாகிஸ்தான் அரசிடம், ஒரு சார்புடைய தன்மையுன் செயல்பட வேண்டாம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனைகள் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. மேலும் தங்கள் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாறாக மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. சங்க்லா மாவட்டம், கைபர் பக்டுன்க்வா என்ற பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். தன்னுடைய கல்யாணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சனிக்கிழமை வெளியே சென்ற அவர் கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தானின் முதல் சீக்கிய டிவி செய்தி தொகுப்பாளர் ஹர்மீத் சிங்கின் இளைய சகோதர் என்பது குறிப்பிடத்தக்கது.

To read this article in English

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய பாகிஸ்தான் விசாரணையாளர்கள், கொலை செய்யப்பட்டவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம். அதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டதால் கொலை நடத்தப்பட்டதா அல்லது இந்நபர் சிலருக்கு பணம் கடனாக கொடுத்திருந்தார். அதன் காரணமாகவும் கூட கொல்லப்பட்டிருக்கலாம். எனவே நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறது காவல்துறை என்று கூறினார்.

ஹர்மீத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, எனக்கு என்னுடைய சகோதரன் தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. வேறு யாரோ ஒருவர் பேசினார். அவர் என்னுடைய தம்பி இறந்துவிட்டதாக அறிவித்தார். அவனுடைய கொலைக்கு யார் காரணமாக அவர்களை இந்த அரசு நிச்சயம் கைது செய்ய வேண்டும். அதுவரை எனக்கு உறக்கமில்லை என்று கூறியுள்ளார்.

இந்த விபரம் அறிந்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில் “சீக்கியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இம்ரான் கான், இது தான் நீங்கள் போதித்தை சரியாக பின்பற்ற வேண்டிய நேரம். தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குருத்துவாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். மேலும் சி.ஏ.ஏ போராட்டங்களுக்கு எதிராக போராடிய சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment