ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்கள் சாத்தியமா? என்ன சொல்கிறது சட்ட ஆணையம் ?

ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்

சட்ட ஆணையம் : இப்போது நடைமுறையில் இருக்கும் இந்திய அரசியல் அமைப்பின் துணை கொண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் கடினம். பல்வேறு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்கள் மூலமாக ஏற்படும் கருத்துகள் கொண்டே இதைப் பற்றி மத்திய அரசிடம் பேச முடியும் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.

ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி பிஎஸ் சௌஹான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறிய போது “எங்களுக்கு அளிக்கப்பட்ட காலம் முடியப் போகிறது. இது வரை இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. மக்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கருத்துகள் கொண்டு தான் ஒரு முடிவே எடுக்க இயலும் என்று கூறியுள்ளார்.

சட்ட ஆணையம் : ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை

To read this article in English 

இது தொடர்பான விவாதங்களில் 50ற்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து செய்த வாக்குவாதம் மற்றும் உரையாடல்கள் நிறைய மாற்றுக் கருத்துகள் எங்களுக்கு உதவி கரமாக இருந்தது. ஆனால் இந்த கருத்துகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு ஆய்வறிக்கையினை எங்களால் சமர்பிக்க இயலாது.

தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறிவர் இருப்பினும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் தவிர்த்து மற்ற அனைத்து சட்டமன்றங்களுக்கும் , நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என அந்த ஆணையம் கூறியுள்ளது.

அரசியல் சாசனப் பிரிவு 172-ல் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்பு 2021ம் ஆண்டில் இருந்து இந்த முறை நடை முறைக்கு வரும். ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என்றும் கூறியுள்ளது சட்ட ஆணையம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close