Snowman's footprint found by Indian Army - நேபாளத்தில் பனி மனிதனின் கால் தடத்தைக் கண்ட இந்திய ராணுவம்! | Indian Express Tamil

Snowman: நேபாளத்தில் பனி மனிதனின் கால் தடத்தைக் கண்ட இந்திய ராணுவம்!

இதற்கு முன்னும் நேபாள எல்லையில் பனி மனிதனை இந்திய ராணுவத்தினர் கண்டிருந்தார்கள்.

Himalayan Yeti Myths

மாகலு – பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது ராட்சத கால்தடம் ஒன்றை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அந்தக் கால் தடம் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்டுள்ளது. ’எட்டி’ எனப்படும் ராட்சத பனி மனிதனின் கால் தடமான இதனை இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னும் நேபாள எல்லையில் பனி மனிதனை இந்திய ராணுவத்தினர் கண்டிருந்தார்கள்.

சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனி மனிதன் இமயமலை, அமெரிக்கா, சைபீரியா பனி பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நேபாள மக்களிடம் பனி மனிதன் குறித்த கருத்து பல்லாண்டுகளாகவே நிலவி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Snowman indian army yeti himalayas