Advertisment

டெல்லி ரகசியம்: பேஸ்புக் பதிவால் மத்திய அமைச்சரின் குடும்பத்தில் புகுந்த பிரச்னை

எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற தனது மகனுக்கு வாழ்த்து கூறி பேஸ்புக்கில் பதிவிட்ட சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேலுக்கு, வேறு ரூபத்தில் பிரச்னை தேடி வந்தது.

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: பேஸ்புக் பதிவால் மத்திய அமைச்சரின் குடும்பத்தில் புகுந்த பிரச்னை

சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் எஸ் பி பாகேல் தனது பேஸ்புக் பக்கத்தில் மகனின் எம்பிபிஎஸ் பட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அந்த பதவி அவரது குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தியதாக கவலைதெரிவித்துள்ளார். முட்டாள்தனமான பல வீடியோக்களை பதிவிடும் அவர், தனது மகனின் சாதனையை ஏன் பதிவிடவில்லை என பேச்சுக்கள் எழுந்ததை தொடர்ந்து, மகனுக்கு வாழ்த்து பதிவை பதிவிட்டார். ஆனால், அந்த பதிவு வேறு ரூபத்தில் அவருக்கு சிக்கலாக அமைந்தது. MBBS மற்றும் MS ஆகிய இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ள அவரது மகள், தனது சாதனையின் போது அப்பா இத்தகைய மகிழ்ச்சியை வெளிகாட்டவில்லை என குற்றச்சாட்டினார். இதையெல்லாம் பார்த்த பாகேல் , சமூக ஊடகம் தனது குடும்பத்தில் பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

அமைதியை இழந்த சீதாராமன்

திங்கட்கிழமை, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் இடையூறு காரணமாக, அமைதியை இழந்தார். காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் எழுப்பிய கேள்விக்கு சீதாராமன் பதில் அளிக்க எழுந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுகதா ராய், சபாநாயகரிடம் நிதியமைச்சர் புகார் செய்வது வாடிக்கையாகிவிட்டதாக சில கருத்துக்களை தெரிவித்தார்

அப்போது, அமைதியை இழந்த சீதாராமன், நான் பதில் சொல்ல எழுந்து நிற்கும் போதெல்லாம் ரன்னிங் கமெண்டரி கொடுக்க என்ன ஆசை? சௌகதா ராய் போன்ற கற்றறிந்த உறுப்பினர்கள் அவர் அமைச்சரைத் தடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

கேள்விகளுக்கு இடையூறு இல்லாமல் பதிலளிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் முறையிட்ட அவர், குறுக்கீடு செய்து திருப்தி அடைவதற்குப் பதிலாக ஏதேனும் இருந்தால், தெளிவுபடுத்தி, தனது பதிலை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அமைச்சரின் பதிலைக் கண்டு ராய் சிரித்துக் கொண்டிருந்தார்.

ட்ரம்மர் மிஸ்ஸிங்கால் குழப்பம்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ், முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைய ஆதரவாளர்களுடன் டெல்லி தலைமையகத்திற்கு வந்தனர். மாலை 4.30 மணியளவில், முழக்கங்களுக்கு மத்தியில் தன்வார் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஊடகங்களுக்கு முன்பாக அவர் முறையாக இணைந்த தருணத்தை மேள தாளங்களுடன் கொண்டாட விரும்பினர். ஆனால், திடீரென சலசலப்பு ஏற்பட்டது. ஏனெனில், மேள தாளம் அடிப்பவரை காணவில்லை. உடனடியாக, அங்கிருந்தவர்கள் கட்சி அலுவலகம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ட்ரம்மர் ஏன் காணாமல் போனார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment