Advertisment

சூரிய கிரகணம் ஹைலைட்ஸ்: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

Solar Eclipse in India Live Updates: சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
solar eclipse 2020

solar eclipse 2020

Solar Eclipse 2020 in India Live Updates: சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போதே அல்லது நேர் உள்ளமைப்பில் வரும்போது, சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வரும்போது, சூரியனின் கதிர்கள் பூமியை மறைக்கும் நிகழ்வே, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம். சூரிய கிரகணங்கள் அதன் நிலையை பொறுத்து பகுதி, முழு மற்றும் அரிய சூரிய கிரகணம் என்று 3 வகைகளாக பிரிக்கிறோம்.

Advertisment

இன்று சூரிய கிரகணம்: எந்த ஊர்களில் தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?

அரிய சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் பார்க்கலாம்?

இன்று ( ஜூன் 21ம் தேதி) நிகழ உள்ள சூரிய கிரகணம், முழு அல்லது வளைவு சூரிய கிரகணம் ஆகும், இன்று, சூரியனின் கதிர்கள் முழுமையாக பூமியை மறைத்து, சூரியனை சுற்றி, ஒரு முழு வளையமாக தெரியும். இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணியளவில் கிரகணம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.29 மணியளவில், கிரகணம் நிறைவடையும். இந்த கிரகணத்தை நேரடியாக பார்க்கக்கூடாது என்றும் பார்த்தால் கண்ணில் கருவளையம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Solar Eclipse 2020 LIVE Updates: Pictures of the Sun from across the country

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Solar Eclipse or Surya Grahan 2020 Today in India Live Updates: சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்



























Highlights

    15:47 (IST)21 Jun 2020

    அந்தரத்தில் இயற்கையாகவே நிற்கும் உலக்கு - பாலப்பட்டி கிராம மக்கள் கிரகணத்தை உறுதி செய்தனர்

    15:45 (IST)21 Jun 2020

    பண்டைய கால ஆய்வு முறை மூலம் சூரிய கிரகணம் உணரப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் மேகக்கூட்டமானதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாவிட்டாலும் பண்டைய கால ஆய்வு முறையான உலக்கை உரலில் நிற்கும் நிகழ்வு மூலமாக கிரகணம் உணரப்பட்டது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.  

    15:43 (IST)21 Jun 2020

    கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி.

    தூத்துக்குடி அந்தோணியார்புரம் முத்துக்குமார் என்பவர் விட்டில் சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது.  

    15:39 (IST)21 Jun 2020

    கோயம்பத்தூரில் சூரிய கிரகணம்:

    15:37 (IST)21 Jun 2020

    சமூக ஊடகங்களில் சூரிய கிரகணம்

    14:33 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கையை களைவோம் - விஜயகுமார் ஐ.பி.எஸ்

    சமைக்கவோ சாப்பிடவோ கூடாது

    கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்

    மோசமான சகுனம்

    போன்ற சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கை களைவோம்; நல்ல சமுதாயம் அமைப்போம் என்று விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி ட்வீட் செய்தார்.  

    14:18 (IST)21 Jun 2020

    அதிகபட்ச சூரிய கிரகணத்தை சென்னை மக்கள் கண்டுகளித்தனர்:

    இன்றைய சூரிய கிரகணத்தின் அதிகபட்ச அளவு சென்னையில் இருந்தும் தெரிந்தது. சூரியனின் 34.23% பகுதி, சந்திரனின் வட்டால் மறைக்கப்படும் அதிகபட்ச கிரகணம் சென்னை மக்கள் காலை 11.59 மணிக்கு கண்டு களித்தனர். 

     

    14:11 (IST)21 Jun 2020

    சென்னை மக்களின் கண்களுக்கு விருந்தளித்த பகுதி சூரிய கிரகணம்:

    பகுதி கிரகணம் சென்னையில் தென்பட்டது. சென்னையில் சூரிய கிரகணம் சரியாக காலை  10.22  மணிக்கு தொடங்கி, பிற்பகல்  1.41  மணி வரை நீடித்தது. 

     

    14:06 (IST)21 Jun 2020

    இந்தியாவில் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தை காணமுடிந்தது

    இந்தியாவில் உள்ள அனுப்கர், சூரத்கர், சிர்சா, ஜக்கல், குருச்சேத்ரா, யமுனாநகர், டேராடூன், தபோவன், ஜோஷிமத் ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணத்தை காணமுடிந்தது. இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தை மட்டும் கண்டனர்.  

    14:01 (IST)21 Jun 2020

    அடுத்த சூரிய கிரகணத்துக்கு நாம் 28 மாதங்கள் காத்திருக்க வேண்டும்

    அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்து வருகிறது.

    இந்த வாய்ப்பை நாம் நழுவவிட்டால், இந்தியாவில், அடுத்த சூரிய கிரகணத்துக்கு நாம் 28 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த சூரிய கிரகணத்தை, பகுதி சூரிய கிரகணமாக, இந்தியாவில் 2022 அக்டோபர் 25-ஆம்தேதி காணலாம். இதனை நாட்டின் மேற்குப் பகுதியில் காணலாம்’’, என்று இந்திய வானியல் கழகத்தின் கள ஆய்வு மற்றும் கல்விக்குழுவின் தலைவர் அனிக்கெட் சுலே கூறினார் 

    13:57 (IST)21 Jun 2020

    சூரியக் கிரகணம்: செய்யக் கூடாதவை

    1. வெறும் கண்களால் நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது.

    2. சூரிய கிரகணத்தைப் பார்க்க எக்ஸ்-ரே பிலிமையோ அல்லது சாதாரண சன் கிளாஸையோ (யூவி பாதுகாப்பு இருந்தாலும் கூட) பயன்படுத்தக் கூடாது.

    3. சூரிய கிரகணத்தைப் பார்க்க வர்ணம் பூசிய கண்ணாடியையும் பயன்படுத்தக் கூடாது.

    4. இந்த சூரிய கிரகணத்தை பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

    13:56 (IST)21 Jun 2020

    சூரியக் கிரகணம்: செய்யக் கூடியவை

    1. சூரிய கிரணத்தை கண்ணால் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை (ஐ.எஸ்.ஓ சான்றளிக்கப்பட்டது) அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

    2. வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வைப் பார்ப்பதற்கு, பாதுகாப்பான வழி எதுவெனில் தொலைநோக்கியை பயன்படுத்துதல் அல்லது பின்ஹோல் கேமராவை பயன்படுத்தி திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்த்தல் மட்டுமே ஆகும்.

    3. சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம். 

    13:53 (IST)21 Jun 2020

    பிற்பகல் மணி 1.41 வரை நீட்டித்த கங்கண சூரிய கிரகணம்

    வானில் அபூர்வ நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம் பிற்பகல் மணி 1.41 வரை நீடிக்கும் என்றும், மக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என எச்சரிக்கை விடப்படுகிறது.   

    13:31 (IST)21 Jun 2020

    நேபாளத்தில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    13:31 (IST)21 Jun 2020

    கராச்சியில் தெரிந்த சூரிய கிரகணம்

    பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் தெரிந்த சூரிய கிரகணம்publive-image

    13:04 (IST)21 Jun 2020

    என்னே ஒரு பாதுகாப்பு

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சூரிய கிரகணத்தை கண்டுரசித்த குடும்பம்

    publive-image

    13:02 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணத்தை பார்த்த இளைய தலைமுறை

    பீகார் மாநிலம் பாட்னாவில் தெரிந்த சூரிய கிரகணத்தை, பாட்னா அறிவியல் மையத்தினால் வழங்கப்பட்ட சிறப்பு கண்ணாடியின் உதவியுடன் பார்க்கும் குழந்தைகள்

    publive-image

    13:00 (IST)21 Jun 2020

    ரியாத் நகரில் தெரிந்த சூரிய கிரகணம்

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தெரிந்த சூரிய கிரகணத்தை முக கவசத்துடன் சிறப்பு கண்ணாடி அணிந்து பார்க்கும் இயற்கை அபிமானி

    publive-image

    12:58 (IST)21 Jun 2020

    டெல்லியின் சப்தார்ஜங் பகுதியில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    12:57 (IST)21 Jun 2020

    டெல்லி ராஜ்பாத்தில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    12:56 (IST)21 Jun 2020

    நொய்டாவில் தெரிந்த சூரிய கிரகணம்

    நொய்டாவில் முற்பகல் 11.48 மணியளவில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    12:32 (IST)21 Jun 2020

    டேராடூனில் தெரிந்த சூரிய கிரகணம்

    உத்தர்காண்ட் மாநிலம்  டேராடூனில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    12:12 (IST)21 Jun 2020

    குருஷேத்ராவில் தெரிந்த சூரிய கிரகணம்

    ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    12:11 (IST)21 Jun 2020

    சண்டிகரில் தெரிந்த சூரிய கிரகணம்

    பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தெரிந்த சூரிய கிரகணம்

    Image: Kamleshwar Singh/Express photo

    publive-image

    11:36 (IST)21 Jun 2020

    ஜெய்ப்பூரில் தெரிந்த சூரிய கிரகணம்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    11:24 (IST)21 Jun 2020

    புது டெல்லியில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    11:20 (IST)21 Jun 2020

    குஜராத் மாநிலம் காந்திநகரில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    11:14 (IST)21 Jun 2020

    துபாயில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    10:51 (IST)21 Jun 2020

    டெல்லியில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    10:47 (IST)21 Jun 2020

    காஷ்மீர் மாநிலத்தில் தெரிந்த சூரிய கிரகணம்

    publive-image

    10:46 (IST)21 Jun 2020

    மகாராஷ்டிராவில் தெரிந்த சூரிய கிரகணம்

    மகாராஷ்டிராவில்  சூரிய கிரகணம் தென்பட்டது.

    publive-image

    10:37 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்கலாமா?

    சூரிய கிரகணத்தை சூரியனை நேரடியாக வெற்றுக் கண்களால் காணக்கூடாது. அப்படிப் பார்த்தால் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகணத்தைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்பான நுட்பம் - அலுமினிய மைலர், கறுப்பு பாலிமர், வெல்டிங் கிளாஸ் நிழல் எண் 14 போன்ற சரியான பில்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பார்ப்பது மற்றும் தொலைநோக்கி மூலம் ஒரு வெள்ளைப் பலகையில் சூரியனின் படத்தைக் காண்பதே பாதுகாப்பானது. நிகழ்வை டி.எஸ்.எல்.ஆர் மூலம் படம்பிடிக்க விரும்புவோர் உங்களிடம் சூரிய கிரகண வடிகட்டி (solar eclipse filter) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் சூரியனின் கதிர்கள் உங்கள் சென்சாருக்குச் சேதம் விளைவிக்கும்.

    10:21 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணம் தென்பட உள்ள ஹாட்ஸ்பாட்கள்

    publive-image

    09:47 (IST)21 Jun 2020

    மிக நீண்ட சூரிய கிரகணம்

    இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். சில தினங்களுக்கு முன்புதான் ’புறநிழல் சந்திர கிரகணம்’ எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் இன்று நிகழப்போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.

    09:37 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணம் தெரியும் நேரம் – நகரங்களின் பட்டியல்

    publive-image

    09:17 (IST)21 Jun 2020

    அடுத்த கிரகணம் எப்போது?

    இந்தியாவில் இன்று தெரிய உள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை போன்று, அடுத்து  2022ம் ஆண்டில் அக்டோபர் 25ம் தேதி தெரியும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    09:07 (IST)21 Jun 2020

    எந்தெந்த இடங்களில் பார்க்கலாம்

    சூரிய கிரகணத்தை தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தெளிவாக பார்க்கலாம்.

    08:43 (IST)21 Jun 2020

    இன்றைய தினம் செய்யக் கூடாதவை

    சூரியனை நேரடியாக பார்க்கக் கூடாது. 

    சாதாரண கண்ணாடிகளை கொண்டு பார்க்கக் கூடாது

    தண்ணீரில் சூரியனின் பிரதிபலிப்பை பார்க்கக் கூடாது

    விளக்கு அல்லது கார்பன் கொண்டு கண்ணாடியை மூடி அதன் மூலம் கிரகணத்தை காணலாம் என ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம்.

    08:24 (IST)21 Jun 2020

    சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது?

    சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.

    Solar Eclipse Live Updates : கொரோனா பாதிப்பை இன்று நிகழும் சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கம் இனிமையாக இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார மந்தநிலை, மக்கள் பாதிப்பு என தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகம் அழியும் என்ற வதந்தி எழுந்துள்ளது.

    சூரியனை பூமிச் சுற்றி வரும் காலத்தை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறை பயன்படுத்தப்படுகிறது. இது அறிவியல்பூர்வமானது என வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    Solar Eclipse
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment