Advertisment

பெட்ரோல், டீசல் வரி: தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநில அரசுகள் மீது மோடி திடீர் தாக்கு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காமல், மக்களுக்கு அநீதி இழைக்கின்றன; பிரதமர் குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
Election Results Highlights: ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

‘Injustice’: PM Modi urges states to reduce VAT on fuels, points to spirit of cooperative federalism: கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியை குறைத்த போதிலும், சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என்றும், கலால் வரி குறைவால் ஏற்பட்ட பலன்களை மக்களுக்கு கிடைக்கச் செய்யாமல் அநீதி இழைத்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை தாக்கிப் பேசினார்.

Advertisment

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமை குறித்த முதலமைச்சர்களுடனான உரையாடலில் பேசிய மோடி, உலகளாவிய சூழ்நிலையால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த ஒரு தனி பிரச்சினையை சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறினார்.

அப்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகையில், “போர் சூழ்நிலை உருவாகி, எரிபொருள் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளது, அத்தகைய சூழலில், சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த உலகளாவிய நெருக்கடி பல சவால்களைக் கொண்டுவருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வை மேலும் மேம்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது,” என்று மோடி கூறினார்.

பின்னர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த மோடி, கடந்த நவம்பர் மாதம் மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலைச் சுமையைக் குறைக்க கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. எனவே மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு கிடைக்கச்செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியது என்று மோடி கூறினார்.

இதையும் படியுங்கள்: ராம நவமி மோதல்; குஜராத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

“சில மாநிலங்கள் வரியைக் குறைத்தன, ஆனால் சில மாநிலங்கள் வரி குறைப்பால் ஏற்பட்ட எந்தப் பலனையும் மக்களுக்கு அளிக்கவில்லை. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒரு வகையில் அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’’ என்று மோடி கூறினார்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக மத்திய அரசின் பேச்சைக் கேட்கவில்லை, மேலும் அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர், என்று மோடி கூறினார்.

"நவம்பரில் செய்திருக்க வேண்டியதை இப்போதாவது செய்து, வாட் வரியைக் குறைப்பதன் மூலம் நீங்கள் குடிமக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று மோடி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India Petrol Diesel Rate Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment