"என்னைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியின் மரணம் கொலைதான்”: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணிய சாமி

"என்னைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியின் மரணம் கொலைதான்”, என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியின் மரணம் கொலைதான்”, என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை)உணர்வற்ற நிலையில் ஓட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சில ஊடகங்கள் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போலவும், டம்ளரில் மது இருப்பது போலவும் காட்சிகளை வைத்து செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, “ஊடக செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. அதனால், இந்த வழக்கின் விசாரணைக்கு நாம் காத்திருக்க வேண்டும். ஸ்ரீதேவி போதை தரும் மதுபானங்களை அருந்தியதில்லை. சிசிடிவி காட்சிகளும் இல்லை. அப்படியிருக்கையில், பிரேத பரிசோதனைக்கு முன்னரே அவர் மாரடைப்பால் இறந்தார் என மருத்துவர்கள் எப்படி தெரிவித்தனர். என்னை கேட்டால் இதனை கொலை என்றுதான் சொல்வேன்”, என கூறினார்.

×Close
×Close