Advertisment

2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் துளிகள்!

2020-ல் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் துளிகள்!

டெல்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

Advertisment

*வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை.

*டிஜிட்டல் வழியில் கல்வி.

*உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 8 கோடி இலவச கேஸ் இணைப்பு.

*அனைத்து ரயில்களிலும் வை ஃபை மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

*ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு

* முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ஏழை எளியோர்க்கு ரூ 3லட்சம் கோடி.

*சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை செயல்படுத்துதல்

*சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

*3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி.

*பழங்குடியினருக்கான ஒதுக்கீடு நிதியில் 50 சதவீதம் கூடுதல்.

* மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்

* அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனை .

*பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம்.

*2020-ல் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்.

* 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்

* பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகம்.

*செளபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி மின் இணைப்புகள் வழங்கப்படும்

*பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு ஏகலைவா பள்ளிகள் தொடங்கும் திட்டம்.

*தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டும் திட்டம்.

*மூங்கில் மரங்கள் வளர்ப்புக்காக 12,900 கோடி ஒதுக்கீடு

*விமானநிலையங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயர்த்த திட்டம்

*குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலை., திறக்க திட்டம்

*விவசாயிக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி உயர்வு

*9,000 கி.மீ., தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம்.

*செல்போன் இறக்குமதி  வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்வு

Budget 2019 Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment