பயிர் கழிவுகளை எரித்தால் சிறை: டெல்லி காற்று மாசு வழக்கில் புதிய சட்டம் கொண்டுவர சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

“சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

“சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SC moots restoring

பயிர் கழிவுகளை எரித்தால் சிறை: டெல்லி காற்று மாசு வழக்கில் புதிய சட்டம் கொண்டுவர சுப்ரீம்கோர்ட் பரிந்துரை!

பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ல் உள்ள குற்றவியல் பிரிவை மீண்டும் கொண்டுவரலாமா என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பயிர் கழிவுகளை எரிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதன் மூலம், "தடுப்பு நடவடிக்கையாக" இது அமையும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

Advertisment

நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தது. அப்போது, தலைமை நீதிபதி, குற்றவியல் வழக்குக்கான பிரிவு இருந்தால், பயிர் கழிவுகளை எரிக்கும் சிலரை சிறைக்கு அனுப்பினால், அது சரியான செய்தியை அனுப்பும். இந்த சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவருவது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, விவசாயிகளைத் துன்புறுத்தக் கூடாது என்பது அரசின் தேசிய கொள்கை என்று தெரிவித்தார். "நாம் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார். தலைமை நீதிபதி கவாய், விவசாயிகளை அரவணைத்துச் செல்வதை ஒப்புக்கொண்டார். அதேசமயம், பயிர் கழிவுகளைப் பயன்படுத்த மாற்று வழிகளை வழங்குவதன் மூலம், "கேரட் மற்றும் குச்சி" (carrot and stick) கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றார். "நீங்கள் அவர்களுக்கு மாற்று வழியைக் கொடுங்கள், அதே சமயம் தண்டனை கொடுக்கும் முறையையும் பயன்படுத்துங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.

"காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது 5 வருட செயல்முறையாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "விவசாயிகளுக்கு சிறப்பு நிலை உள்ளது. அவர்களின் முயற்சிகளால்தான் நாம் உண்ண உணவைப் பெறுகிறோம். ஆனால், அதற்காக அவர்கள் நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையில்லை என்று அர்த்தமல்ல" என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

Advertisment
Advertisements

குற்றவியல் பிரிவை மீண்டும் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி பரிந்துரைத்தார். ஆனால், சிறிய விவசாயிகளை சிறைக்கு அனுப்பினால், அவர்களை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, "அனைத்து விவசாயிகளுக்கும் இது பொருந்தும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஒருசிலருக்கு தண்டனை அளிப்பது தடுப்பு நடவடிக்கையாக அமையும் என்பதற்காகவே இதைக் கூறுகிறோம்" என்றார்.

கடந்த ஆண்டு, காற்று மாசுபாடு தொடர்பான வழக்குகளை விசாரித்தபோதும், உச்ச நீதிமன்றம் இதே கருத்தைத் தெரிவித்திருந்தது. 2023-ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, பிரிவு 15-ல் இருந்த குற்றவியல் பிரிவு நீக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் "பல்லில்லாததாக" மாறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Supreme Court Of India Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: