Advertisment

முடிவு எடுக்கும் வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியுமா? - உச்ச நீதிமன்றம்

போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கிகரிக்கின்றோம் என்பதை தெரிவுப்படுத்துகிறோம் - உச்ச நீதிமன்றம்

author-image
WebDesk
New Update
முடிவு எடுக்கும் வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியுமா? - உச்ச நீதிமன்றம்

Apurva Vishwanath , Sukrita Baruah 

Advertisment

Supreme Court asks Centre if new farm laws can wait until it hears the matter  :  விவசாயிகள் போராடுவதற்கு உரிமை உண்டு என்று மேற்கோள்காட்டிய உச்ச நீதிமன்றம், வருட கணக்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறியது. புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை ஏன் அரசு இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா? அது தொடர்பான மத்திய அரசின் கருத்தினை வழங்குமாறு அறிவுறுத்தியது.

டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையின் போது, “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரிக்கும் வரை புதிய சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருக்க முடியுமா” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டது.

இதுபோன்ற உத்தரவாதத்தை நீதிமன்றத்திற்கு வழங்குவது சாத்தியமில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் ஆட்சேபனை இருந்தபோதிலும், வேணுகோபால் பெஞ்சில் இந்த விவகாரத்தை அரசாங்கத்துடன் விவாதிப்பதாக தெரிவித்தார்.

இது பேச்சுவார்த்தைக்கு தான் வழிவகை செய்யும். நாங்கள் சட்டங்களுக்கு இடைக்கால தடை ஏதும் விதிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், இரண்டு தரப்பினரின் கருத்துகளை கேட்க சுதந்திரமான பாரபட்சமற்ற கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்றும் அதுவரை அமைதியான முறையில் போராட்டம் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

publive-image

மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் அமைதியான முறையில் பொதுச்சொத்திற்கோ, மனித உயிர்களுக்கோ இழப்பு ஏதும் ஏற்படாத வகையில் நடைபெற வேண்டும். காவல்துறையினரால் நீங்கள் வன்முறையை தூண்டக் கூடாது என்றும் அமர்வு கேட்டுக் கொண்டது. மேலும் இது தொடர்பாக முக்கியமான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்ற போதிலும், ஊடகவியலாளர் பி. சாய்நாத் மற்றும் பாரதிய கிஷான் யூனியன் போன்ற விவசாய சங்கங்களில் இருந்து யாரேனும் இந்த கமிட்டியில் இடம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.  மற்ற விவசாய சங்கங்கள் நீதிமன்றத்தில் இல்லை. அவர்கள் பி.கே.யுடனான கருத்துகளில் இருந்து வேறுபடலாம் என்று சோலிசிட்டர் ஜெனரல் மேத்தா கூறினார்.

புதன் கிழமை அன்று இந்த விவகாரத்தில் பி.கே.யு-ராகேஷ் டிக்கிட், பி.கே.யு-சிதுபூர் (ஜக்ஜீத் எஸ்.தல்லேவால்), பி.கே.யூ-ராஜேவால் (பல்பீர் சிங் ராஜேவால்), பி.கே.யு-லகோவால் (ஹரிந்தர் சிங் லகோவால்), ஜம்ஹூரி கிசான் சபா ஆகியோரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் வியாழக்கிழமை அந்த பிரதிநிதிகள் யாரும் அதில் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.  குளிர்கால விடுமுறைக்கு தயார் ஆகி வருகின்ற நிலையில் தலைமை நீதிபதி விடுமுறைக்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

publive-image

இந்த சட்டங்களின் வேலிடிட்டி குறித்து இன்று நாங்கள் ஏதும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் இன்று விவசாயிகள் போராட்டம் மற்றும் சுதந்திரமான இயக்கத்திற்கான பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து மட்டுமே பேச உள்ளோம் என்றூ கூறினார். மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, டெல்லி குடியிருப்பாளார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகளுக்காகவும் அவர் ஆஜரானார். அப்போது அவர் போராட்டத்திற்கான உரிமை வாழ்வதற்கான உரிமையுடம் சமப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

டெல்லியில் ஒரு மக்கள் தொகை உள்ளது. அது தற்சார்புடன் இல்லை. பழங்களும் காய்கறிகளும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றன. எல்லைகள் மூடப்பட்டால் விலைகள் உயரும். போராட்டத்திற்கான உரிமை மற்ற உரிமைகளை பெறுவதற்கு மறுப்பாக நீடிக்காது என்றார்.

சால்வே ஒரு புதிய நெறிமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார், அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதை அதில் இணைக்க வேண்டும். அப்போது தான் எந்தவொரு உயிரும் மற்றும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அவர்கள் பொறுப்பேற்க முடியும் என்று கூறினார்.  "இந்த நீதிமன்றம் போராட்டத்திற்கான உரிமையின் வரையறைகளை அறிவிக்க வேண்டிய முக்கியமான நேரம். பெரிய கூட்டங்களை ஒழுங்கமைக்கும் தொழிற்சங்கங்கள் கூட்டத்தின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும், ”என்றார்.

போராடுவதற்கான உரிமை மற்றவர்களின் உரிமைகளில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி ஒப்புக் கொண்டார். ஒப்புக் கொண்டதுடன், எதிர்ப்பு முறையை மாற்றவது தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசை அணுகும் என்றும் கூறினார். போராட உங்களுக்கு உரிமை உண்டு அதில் நாங்கள் தலையிடப் போவதில்லை. ஆனால் போராட்டத்தின் நோக்கம் ஒருவரிடம் பேசுவதாக இருக்க வேண்டும். நீங்கள் பல ஆண்டுகளாக போராட்டத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று எஸ்.ஏ. போப்டே கூறினார்.

போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கிகரிக்கின்றோம் என்பதை தெரிவுப்படுத்துகிறோம். அதை குறைப்பதற்காக சமநிலைப்படுத்துகிறோம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. ஆனால் இது யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.

விவசாய சங்க தலைவர்கள் துஷ்யந்த் தேவ், எச்.எஸ். பூல்கா, ப்ரசாந்த் பூசன் மற்றும் கோலின் கோன்ஸால்வ்ஸ் உள்ளிட்ட நான்கு வழக்கறிஞர்களுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறினார்கள்.  ராஷ்ட்ரிய கிஷான் மஹாசங்கி கே.வி. பிஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நாங்கள் கட்சிக்காரர்களாக இடம் பெறவில்லை என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Protest Supreme Court Farmers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment