நீதிபதி கர்ணன் கைதாக வேண்டும்; உச்சநீதிமன்றம்

சென்னை உயர நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2005-ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் நீதிபதி கர்ணன். இதையடுத்து, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், மனநலப் பரிசோதனைக்கும் கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதையடுத்து, நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 4-வது முறையாக கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.

×Close
×Close