நீதிபதி ஜோசப் பரிந்துரை விவகாரம்: இன்று மீண்டும் கூடுகிறது கொலீஜியம்!!!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நியமனம் குறித்து நீதிபதி ஜோசப் பரிந்துரை விவகாரத்தில் இன்று மீண்டும் கூடுகிறது கொலீஜியம் குழு.

உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு நீதிபதி ஜோசப் மற்றும் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு ஜோசப்-ன் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. இது குறித்து கொலீஜியம் குழு உச்சநீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் இன்று மீண்டும் கொலீஜியம் குழு கூடுகிறது.

முன்னதாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று மீண்டும் கொலீஜியம் அமைப்பு குழு கூடுகிறது. இன்று நடைபெறும் இக்கூட்டத்தில், நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், இந்த கொலீஜியம் கூட்டத்தை கூட்டும்பட் கேட்டுக்கொண்டார். இதற்காகத் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதினார். அதில், 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு மீண்டும் நீதிபதி ஜோசப்பின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி செல்லமேஸ்வரின் வலியுறுத்தலுக்கு இணங்க நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

(இது குறித்த முந்தைய செய்தி : தீபக் மிஸ்ராவுக்கு நெருக்கடி : கே.எம்.ஜோசப் நியமனம் விவகாரம்)

×Close
×Close