ஒரிசா தலைமை நீதிபதி முரளிதர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை - Supreme Court collegium recommends transfer of Orissa CJ Justice Muralidhar to Chennai HC | Indian Express Tamil

ஒரிசா தலைமை நீதிபதி முரளிதர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை

ஒரிசா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரிசா தலைமை நீதிபதி முரளிதர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை

நீதிபதி முரளிதர் முதலில் மே 2006-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், தற்போது ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஜே) நீதிபதி எஸ். முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க புதன்கிழமை கூடியதாக வட்டாரங்கள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில், நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணி இடமாற்றம் செய்ய கொலிஜியம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி முரளிதர் முதலில் மே, 2006-இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பின்னர், அவர் மார்ச் 6, 2020-இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், அவர் ஜனவரி 4, 2021-இல் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

முன்னதாக, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபாங்கர் தத்தாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

பஞ்சாப், ஹரியானா, பம்பாய், கர்நாடகா உயர் நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிக்க செப்டம்பர் 12-ம் தேதி தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Supreme court collegium recommends transfer of orissa cj justice muralidhar to chennai hc

Best of Express