இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், செவ்வாய்க்கிழமை- அலகாபாத் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி அரவிந்த் குமார் – முறையே – உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான முந்தைய ஐந்து பரிந்துரைகள் நிலுவையில் உள்ள நிலையில், கொலீஜியத்தின் புதிய பரிந்துரை வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, கொலீஜியம் ஐந்து பெயர்களை பரிந்துரைத்தது, இருப்பினும் இன்னும் நியமனங்கள் செய்யப்படவில்லை.
நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப், எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், இரண்டு புதிய பெயர்களை நியமனம் செய்வதற்கான விரிவான காரணங்களைத் தெரிவித்தது.
அதில், நீதிபதி ராஜேஷ் பிண்டல் நியமனம் தொடர்பான கொலீஜியத்தின் தீர்மானத்தில் அலகாபாத் ஒருமனதாக உள்ளது. இருப்பினும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அரவிந்த் குமாரின் நியமனம் தொடர்பாக, நீதிபதி கே.எம்.ஜோசப் அவரது பெயரை பின்னர் பரிசீலிக்கலாம் என்ற அடிப்படையில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
34 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் தற்போது 27 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருவதாகவும், ஏழு காலியிடங்கள் உள்ளன என்றும் கொலீஜியம் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13, 2022 அன்று, கொலிஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க (i) நீதிபதி பங்கஜ் மித்தல், (ii) நீதிபதி சஞ்சய் கரோல், (iii) நீதிபதி பி வி சஞ்சய் குமார், (iv) நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, மற்றும் (v) நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து பெயர்களை பரிந்துரைத்தது, அவர்களின் நியமனம் இன்னும் அரசால் அறிவிக்கப்படவில்லை.
மீதமுள்ள இரண்டு காலியிடங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, மேலும் இரண்டு பெயர்களை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கான பெயர்களை மதிப்பிடும்போது, உயர்வுக்கான பரிசீலனையில் உள்ளவர்களால் எழுதப்பட்ட தீர்ப்புகள், கொலீஜியம் உறுப்பினர்களிடையே அவர்களின் நீதித்துறை புத்திசாலித்தனம் பற்றிய அர்த்தமுள்ள விவாதம் மற்றும் மதிப்பீட்டிற்காக விநியோகிக்கப்பட்டது என்று அது கூறியது.
அந்த அறிக்கையில், தகுதியான தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகளின் தகுதி, நேர்மை ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்த பிறகு, நீதிபதிகள் பிண்டல் மற்றும் குமார் ஆகியோர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு எல்லா வகையிலும் மிகவும் தகுதியானவர்கள் மற்றும் பொருத்தமானவர்கள் என்று கொலீஜியம் கண்டறிந்தது.
அந்தத் தீர்மானம், மேற்கண்ட பெயர்களைப் பரிந்துரைக்கும் போது, கொலீஜியம் பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொண்டது: 1) அந்தந்த தாய் நீதிமன்றங்களில் உள்ள தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளின் மூப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த பணி மூப்பு; 2) பரிசீலனையில் உள்ள நீதிபதிகளின் தகுதி, செயல்திறன் மற்றும் நேர்மை; 3) உச்ச நீதிமன்றத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம்: (i) உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத அல்லது போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத உயர் நீதிமன்றங்களின் பிரதிநிதித்துவம்; (ii) சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை நியமித்தல்; (iii) பாலின வேறுபாடு; மற்றும் (iv) சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டது.
அதில், 2022 டிசம்பர் 13 தேதியிட்ட தீர்மானத்தின் மூலம் கொலீஜியம் முன்னர் பரிந்துரைத்த பெயர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய தற்போது பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பெயர்களைக் காட்டிலும் முன்னுரிமை பெறும். மேலும் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளின் நியமனங்கள் தனித்தனியாகவும் முன்னதாகவும் இந்த தீர்மானத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“