Advertisment

மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றம்; வேளாண் சட்டங்களை நிறுத்த பரிந்துரை

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
farmer protest, farmers news, farmers protest reason, farmers bill 2020, farmers protest in delhi, delhi farmers protest, விவசாயிகள் போராட்டம், உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்கள், மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றம், farmers protest in delhi, farmer protest today, farmer protest latest news, farmers protest, farmers protest today, farm bill, farmers bill, farmers bill 2020 news

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. மேலும், குழு அமைக்கவும் அந்த குழுவின் முன்பு பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையை எளிதாக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்த அறிவுறுத்தியது.

Advertisment

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் போராட்டத்தையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசாங்கம் போராட்டங்களைக் கையாளுவது குறித்து விமர்சித்தது.

“மத்திய அரசு பிரச்சினையை சரியாக கையாளுகிறது என்று நாங்கள் நினைக்கவில்லை. இன்று நாம் சில நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் திறம்பட செயல்படுகிறீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை… ஒரு குழுவை அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம். அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால், வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்துவோம்… நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதால்தான் நாங்கள் இதைச் செய்கிறோம்… இந்திய ஒன்றிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

“இந்த சட்டங்களால் வேலைநிறுத்தம் ஏற்பட்டது. இப்போது நீங்கள் வேலைநிறுத்தத்தை தீர்க்க வேண்டும்.... நாங்கள் தேர்ந்தெடுத்த ஒரு குழுவால் இந்த சிக்கலை தீர்க்க வசதியாக இந்த உத்தரவை நிறைவேற்ற நாங்கள் முன்மொழிகிறோம்... நாங்கள் சூழ்நிலையை எளிதாக்கவும் பேச்சுவார்த்தைக்கு உகந்ததாகவும் மாற்றுவோம். அதுவரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கலாம். ரத்தக் களரிக்கு யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள்? 21வது பிரிவை அரசியலமைப்பு நீதிமன்றமாக நாம் ஆதரிக்க வேண்டும். சில மோதல்கள் நடந்தால் என்ன செய்வது? ” என்று தலைமை நீதிபதி கேட்டார். இது குறித்து இந்த அமர்வு, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை உத்தரவுகளை அனுப்பலாம் என்று கூறியது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவுகளை நிறைவேற்ற அவசரப்பட வேண்டாம் என்று கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. “உங்களுக்கு மிக நீண்ட அவகாசம் அளித்துள்ளோம். அதனால், பொறுமை குறித்து எங்களுக்கு சொற்பொழிவாற்ற வேண்டாம். உத்தரவை எப்போது அனுப்ப வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். நாம் இன்றும் நாளையையும் கடந்து செல்லலாம்.” என்று தெரிவித்தனர்.

முன்னதாக விசாரணையின் போது, ​​வேளாண் சட்டங்களை நிறுத்த நீதிமன்றம் பரிந்துரைத்ததை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அது “கடுமையானது” என்று கூறி எதிர்த்தார். “மூன்று வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி எந்தவொரு மனுவும் சுட்டிக்காட்டவில்லை. சட்டங்களை நிறுத்த முடியாது. இது கடுமையானது.” என்றுகூறினார். நாங்கள் அதை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதாக அறிவிக்கவில்லை” என்று சி.ஜே.ஐ பதிலளித்தார்.

விவசாய சங்கங்கள் வந்து அதை குழுவிடம் சொல்ல வேண்டும் என்று கூறிய தலைமை வழக்கறிஞர் வேளாண் சட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

சட்டமன்றத்தின் திறனுக்கு அப்பாற்பட்டது அல்லது எந்தவொரு அரசியலமைப்பு விதிக்கும் எதிரான அடிப்படை உரிமைகளை மீறுகிற வரை ஒரு சட்டத்தை நீதிமன்றங்களால் நிறுத்த முடியாது என்று வேணுகோபால் சுட்டிக்காட்டினார். மனுதாரர்கள் யாரும் இது குறித்து வாதிடவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் மாறாக பலர் ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் சட்டங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். “அதனால்தான் நாங்கள் அவர்களைப் சட்டத்தைப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் விவசாயிகளுடன் விவாதிக்க விரும்பினார். ஆனால், சிலர் அதை சீர்குலைத்தனர் என்றும் ஊடகத்தினர் கூட தாக்கப்பட்டனர் என்று தலைமை வழக்கறிஞர் கூறினார்.

எந்த சட்ட மீறலையும் நீதிமன்றம் பாதுகாப்பதாக புரிந்து கொள்ளக்கூடாது என்று கூறிய சி.ஜே.ஐ சட்டத்தை மீறுபவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்வார்கள். உயிர் மற்றும் சொத்துக்கள் சேதமடைவதைத் தடுக்க இந்த உத்தரவை நிறைவேற்ற நாங்கள் முன்மொழிகிறோம்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Supreme Court Supreme Court Of India Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment