அயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

தலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது

Supreme court hears Ayodhya verdict review petition today

Supreme court hears Ayodhya verdict review petition: உத்திரப்பிரதேசம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு கடந்த மாதம் இந்த சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் அரசால் அமைக்கப்படும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அந்த அறக்கட்டளை அங்கு ராமர் கோவில் கட்டுவதை மேற்பார்வையிடும் என்றும் அறிவித்தது. மேலும் பாபர் மசூதிக்கு மாற்றாக உத்திரப்பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Owaisi, RSS, Congress and BJP Give First Reactions on SC Verdict

இந்த உத்தரவை எதிர்த்து இதுவரை 18 மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இதற்கான விசாரணை இன்று பிற்பகல் துவங்கியது

மேலும் படிக்க : Ayodhya Verdict : அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை

இந்த மறுசீராய்வு மனுக்கள் இதர வழக்குகள் போன்று திறந்தவெளி நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்படாமல் சாம்ப்பரில் நடைபெற்றது. தலைமை நீதிபதி எஸ்.பாப்டே அடங்கிய அரசியல் சாசன அமர்வு நிர்மோகி அக்ரா, அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் மற்றும் 40 சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து கொடுத்திருக்கும் மறுசீராய்வு மனுக்கள் உட்பட 18 மனுக்கள் தற்போது வரை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரி மவுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மக்பூசுர் ரகுமான், மிஷ்பகுத்தீன் ஆகிய 4 பேரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அயோத்தி வழக்கில் இதுவரை தாக்கல் செய்து இருந்த 18 சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Supreme court hears ayodhya verdict review petition today

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com