மூன்று நாள் தர்ணாவை முடிவுக்குக் கொண்டு வந்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மேகாலயா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரை கைது செய்ய அனுமதி இல்லை என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சாரதா சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேற்குவங்க டிஜிபி, தலைமைச்செயலாளர் ஆகியோரும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா, “சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐ-யை பயன்படுத்துவதையே நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

சாரதா சிட் ஃபண்ட் தொடர்பான விசாரணையில், கொல்கத்தா காவல் ஆணையரை விசாரணை செய்ய தடுத்த போலீசை எதிர்த்து சிபிஐ முறையீடு செய்த மனுவை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரித்தது. இது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாரதா நிதி மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ மனு மீது இன்று விசாரணை விவரம்

மேற்குவங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனமும், ரோஸ்வேலி நிறுவனமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததை அடுத்து இவ்விவகாரம் சிபிஐ விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இந்த விசாரணை தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரை நேரில் விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவருடைய வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் காவல் ஆணையரை விசாரிக்க விடாமல் காவல் துறையினர் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை வாகனங்களிலேயே சிறைபிடித்தனர். பின் அம்மாநில முதலமைச்சர் மம்தா, இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட, ‘அரசியல் கட்டமைப்பை காப்போம்’ என்று தர்ணா போராட்டத்தில் களமிறங்கினார்.

மத்திய அரசின் தூண்டுதலிலேயே சிபிஐ அதிகாரிகள் அத்துமீறி நடக்கின்றனர் என மம்தா பானர்ஜி மூன்றாவது நாளாக போராட்டம் இன்று நடத்திவருகிறார். மேலும், இது தொடர்பாக நேற்று பேசிய மம்தா, “என் உயிரையே கூட கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் பணிந்துப்போக மாட்டேன். என் கட்சியினரை நீங்கள் குற்றம்சாட்டியதற்காக கூட நான் வீதிக்கு வரவில்லை ஆனால் கொல்கத்தாவின் காவல் ஆணையரை அவமானப்படுத்திவிட்டீர்கள். அதற்காகவே கோவமாக இருக்கிறேன்.” என்றார்.

இந்நிலையில், நேற்று இது தொடர்பான விவகாரத்தில், மம்தா மற்றும் கொல்கத்தா போலீசார் சட்டத்தை பின்பற்ற இடையூறாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை நேற்று ஏற்றுகொண்ட நீதிமன்றம், சிபிஐ-ன் சார்பாக வைக்கப்பட்ட முறையீடுகளை கேட்டது. அந்த மனுவில், சாரதா சிட் ஃபண்ட் மோசடியில், கொல்கத்தா காவல் ஆணியர் ராஜீவ் குமார் முக்கிய குற்றவாளி என்றும், இந்த வழக்கில் மாயமான முக்கிய ஆவணங்களுக்கு அவர் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

முழு விவரம் உள்ளே : Mamata Banerjee Dharna : ‘என் வாழ்க்கையை இழக்கத் தயார்… ஆனால், சமரசம் கிடையாது’ : மம்தா அதிரடி

பின்னர் சிபிஐ-ன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு “அவர் தான் குற்றவாளி என்று நிரூபித்து காட்டுங்கள். அப்படி அவர் தான் குற்றவாளி என்று நிரூபனமானால், சட்டம் அதற்காக தண்டனையை அவருக்கு தரும்” என்று தெரிவித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று கூறியது.

mamata dharna kanimozhi, சிபிஐ

மம்தா பேனர்ஜியுடன் எம்.பி. கனிமொழி நேரில் சந்திப்பு

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தாவிற்கு ஆதரவாக ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திமுக எம்.பி கனிமொழி நேற்று கொல்கத்தாவில் தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வந்த நிலையில், காவல் ஆணையர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இந்த வழக்கில் ராஜீவ் குற்றவாளி கிடையாது, அவர் சாட்சி மட்டுமே. மேலும், சிபிஐ அவரை விசாரணைக்கு அழைக்கும்போது விதிமுறையை சரியாக பின்பற்றவில்லை” என்று கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்நிலையில், மூன்று நாட்களாக நீடித்து வந்த தர்ணா போராட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கான வெற்றி என்று கூறி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மம்தா அறிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close