Advertisment

நிர்பயா நிதியில் வாங்கப்பட்ட எஸ்.யூ.வி.,க்கள்; ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்புக்கு பயன்பாடு

மகாராஷ்டிராவில் பெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியில் இருந்து வாங்கப்பட்ட வாகனங்கள், ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.,க்களின் பாதுகாப்புக்கு செல்கிறது

author-image
WebDesk
New Update
நிர்பயா நிதியில் வாங்கப்பட்ட எஸ்.யூ.வி.,க்கள்; ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்புக்கு பயன்பாடு

Mohamed Thaver

Advertisment

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நிர்பயா நிதியின் கீழ் மும்பை காவல்துறையால் வாங்கப்பட்ட பல வாகனங்கள், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எஸ்கார்ட் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜூன் மாதம், மும்பை காவல்துறை 220 பொலிரோக்கள், 35 எர்டிகாக்கள், 313 பல்சர் பைக்குகள் மற்றும் 200 ஆக்டிவாக்களை நிர்பயா நிதியின் கீழ் 30 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியது, இது பெண்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு 2013 இல் மத்திய அரசு அமைத்த நிதியுதவி திட்டம் ஆகும். ஜூலை மாதத்திற்குள், வாங்கப்பட்ட வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்: இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி

ஆனால், மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாஹேபஞ்சி சிவசேனா பிரிவின் 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்.பி.க்களுக்கு "ஒய்-பிளஸ் வித் எஸ்கார்ட்" பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் 47 பொலிரோக்கள் வி.ஐ.பி பாதுகாப்புத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து மும்பை காவல்துறையின் மோட்டார் போக்குவரத்து துறையால் காவல் நிலையங்களில் இருந்து அவசரமாக திரும்ப கோரப்பட்டன. இந்த 47 பொலிரோக்களில், 17 பொலிரோக்கள் காவல் நிலையங்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டது, ஆனால் 30 பொலிரோக்கள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை.

"ஒய்-பிளஸ் வித் எஸ்கார்ட்" வகைப் பாதுகாப்பைப் பெறுபவர் ஒரு எஸ்கார்ட் வாகனத்தையும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் ஐந்து காவலர்களையும் பெறுகிறார்.

பெயர் வெளியிட விரும்பாத நிலையில் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், புதிய பொலிரோக்கள் ஜூன் மாதம் பல்வேறு போலீஸ் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டன, அவை கொள்முதல் செய்யப்பட்ட உடனேயே, சில காவல் நிலையங்களில் வாகனங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஒரு முக்கியமான வெற்றிடத்தை நிரப்பியது, என்று கூறினார்.

மேலும், "பொலிரோக்கள் முக்கியமாக நகரம் முழுவதும் உள்ள 95 காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிகார வரம்பின் அளவு மற்றும் உணர்திறனைப் பொறுத்து, சில காவல் நிலையங்களுக்கு ஒரு பொலிரோ கிடைத்தது, சிலவற்றுக்கு இரண்டு வழங்கப்பட்டது, ”என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இருப்பினும், பொலிரோக்கள் காவல் நிலையங்களை அடைந்த சில நாட்களுக்குள், வி.ஐ.பி.,களின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் வகையில் அவர்களின் பொலிரோக்களை திருப்பித் தருமாறு காவல் நிலையங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் வட்டாரங்கள் கூறுகையில், வி.ஐ.பி பாதுகாப்புக்கான தேவையை பூர்த்தி செய்யுமாறு கூறியதை அடுத்து, நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் "தற்காலிகமாக" திரும்பப் பெறப்பட்டன.

"இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படாததால், அவை செயல்படுவது கடினம் என்று காவல் நிலையங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. பின்னர், அனைத்தும் இல்லாவிட்டாலும் சில வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஐ.ஜி (வி.ஐ.பி பாதுகாப்பு) கிருஷ்ண பிரகாஷ், காவல் நிலையங்களிடம் வாகனங்களை கோரவில்லை என்றும், அவர்களின் அதிகார வரம்பில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஆதாரங்களை வழங்குமாறு உத்தரவை மட்டுமே பிறப்பித்தோம் என்றும் கூறினார்.

இருப்பினும், சில காவல் நிலையங்கள் தங்களுடைய புதிய பொலிரோக்களை வழங்க மறுத்துவிட்டன. புறநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் ஆறு வாகனங்களில் மூன்று வாகனங்கள் பழுதுக்காக மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் உள்ளன. பொலிரோவையும் திருப்பிக் கொடுத்தால், நகரத்தை நடந்த சென்று ரோந்து செய்வோம் என்று எதிர்பார்க்கப்பட்டதா? அதனால் பொலிரோவை திருப்பி தர மறுத்துவிட்டேன். பல காவல் நிலையங்கள் தங்கள் பொலிரோக்களை திருப்பி அனுப்பிய ஆறு மாதங்களுக்குப் பிறகும் அவற்றைப் பெறவில்லை என்பதால் இது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.எல்.ஏ.க்களுக்கு எஸ்கார்ட் வாகனங்களை வழங்குவதற்காக காவல் நிலையங்களில் இருந்து வாகனங்கள் கோரப்பட்ட நிலையில், இடைவெளி நிரப்பப்பட்டவுடன் அவை திருப்பி அனுப்பப்பட்டன.

இருப்பினும், நவ்கர், பந்த் நகர் மற்றும் எம்.ஐ.டி.சி காவல் நிலையங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு தங்கள் வாகனங்களைத் திரும்பப் பெற்றாலும், சாகி நாகா, தியோனார், டிராம்பே, பாண்டுப் மற்றும் முலுண்ட் உட்பட பல காவல் நிலையங்களில் இருந்து தலா ஒரு பொலிரோவை எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த வாகனங்கள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என தி சண்டே எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. நேரு நகர் மற்றும் சிவாஜி நகர் காவல் நிலையங்களில் ஒவ்வொன்றும் அதன் இரண்டு பொலிரோக்களைக் கொடுத்தது, இன்னும் அவை திரும்ப பெறவில்லை.

இவை அனைத்தும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ரோந்து ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் முக்கியமான காவல் நிலையங்கள்.

இது குறித்து புறநகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் பொலிரோ வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல மற்ற காவல் நிலையங்களின் வாகனங்கள் அல்லது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்." என்றார்.

காவல்துறை மோட்டார் போக்குவரத்து துறையின் வட்டாரம் கூறுகையில், காவல் துறை ஜூன் மாதம் வாங்கிய பொலிரோக்கள், காவல் நிலையங்களுக்கான வாகனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகத்தான் என்றும், 2019க்குப் பிறகு இது முதல் கொள்முதல் என்றும் கூறினார். பல ஆண்டுகளாக, காவல்துறை வாகனங்களைப் பெறுவதில் ஈடுசெய்யும் அதிகரிப்பு செய்யப்படவில்லை, ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஷிண்டே தரப்பின் செய்தித் தொடர்பாளர் கிரண் பவாஸ்கர், “எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்காக எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும், உத்தவ் தாக்கரே பிரிவினரால் கதர் மற்றும் கோக்கா போன்ற தொடர்ச்சியான கேலிக்கூத்துகளால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் காரணமாக ஒய்-பிளஸ் எஸ்கார்ட் பாதுகாப்பு உள்ளது,” என்று கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கான பாதுகாப்புப் பணியாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய மகாராஷ்டிரா காவல்துறை ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு எவ்வாறு சென்றது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment