Advertisment

இந்தியாவின் சுத்தமான நகரம் : நான்காவது முறையாக விருதை தட்டிச் சென்ற இந்தூர்

இந்தூரைத் தொடர்ந்து சூரத் மற்றும் நவி மும்பை நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. 

author-image
WebDesk
New Update
Swachh Survekshan 2020 Indore is the cleanest city in the country for the fourth consecutive time

Swachh Survekshan 2020 : Indore is the cleanest city in the country  :  மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்த நகரம்.

Advertisment

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த மதிப்பைப் பெற்ற ம.பி. அரசுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். மேலும் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌஹானின் தொடர் அர்பணிப்பால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும், முனிசிபல் கார்ப்பரேசனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஸ்வச் சர்வேக்‌ஷான் (Swach Survekshan) என்ற திட்டத்தின் கீழ் ஸ்வச் மஹோட்சவ் என்று பெயரில் நகர்புறத்தில் நிலவி வரும் தூய்மை சூழலுக்காக இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தூரைத் தொடர்ந்து சூரத் மற்றும் நவி மும்பை நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Indore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment