Advertisment

இந்து கடவுள் இடம்பெற்ற செய்தித்தாளில் இறைச்சியை மடித்து கொடுத்ததாக புகார்: உபி கடை உரிமையாளர் கைது

உத்தரபிரதேசத்தில், சிக்கன் இறைச்சியை, இந்து கடவுகள் இடம் பெற்றிருக்கும் செய்தித்தாளில் மடித்து கொடுத்துவிட்டார் என்று கடை உரிமையாளரை கைது செய்துள்ளது காவல்துறை.

author-image
WebDesk
New Update
இந்து கடவுள் இடம்பெற்ற செய்தித்தாளில் இறைச்சியை மடித்து கொடுத்ததாக புகார்: உபி கடை உரிமையாளர் கைது

உத்தரபிரதேசத்தில், சிக்கன் இறைச்சியை, இந்து கடவுகள் இடம் பெற்றிருக்கும் செய்தித்தாளில் மடித்து கொடுத்துவிட்டார் என்று கடை உரிமையாளரை கைது செய்துள்ளது காவல்துறை.

Advertisment

உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பல் என்றும் இடத்தில் மெஹக் என்ற உணவகத்தை தலிப் ஹுசைன் நடத்தி வருகிறார். நான்கு நாட்களுக்கு முன்பு சம்பல் காவ்லதுறையினர் கைது செய்தனர். சிக்கன் இறைச்சியை இந்து கடவுள் இடம்பெற்றிருக்கும் செய்திதாளில் மடித்து கொடுத்துவிட்டார் என்பதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரை கைது செய்ய முயற்சிக்கும்போது, சிறிய கத்தி எடுத்து காவல்துறையினரை தாக்க வந்ததாகவும்,  ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர் என்று காவல்துறையினர் தரப்பு கூறுகின்றனர்.

இரண்டு பிரிவினருக்கும் கலகம் மூட்டுவது 153ஏ , மத நம்பிக்கைகளை காயப்படுத்துவது 295ஏ, அரசு ஊழியரை தாக்குவது 353, கொலை செய்ய முயல்வது 307 உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் காவல்துறையினர் சொல்லும் குற்றச்சாட்டுகளை தலிப் ஹுசைன் மகன் முற்றிலுமாக மறுத்துள்ளார். பல வருடங்களாக நாங்கள் இக்கடையை நடத்தி வருகிறோம். இறைச்சியை, அலுமினியம் கவரில்தான் மடித்துகொடுப்போம். சாப்பாத்தியை மட்டுமே செய்தித்தாளில் மடித்து கொடுப்போம். அதிலும் எந்த கடவுளின் படங்களும் இடம் பெறாது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் உணவகத்தில் வேலை செய்பவர்களும் இதையே கூறிகின்றனர். காவ்லதுறை உணவகத்திற்கு வந்திருந்தபோது, எல்லா ஊழியர்களும் பயத்தில் இருந்ததாகவும், ஹுசைன் தலிப் அவர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தே பதிலளித்தார் என்றும் அவர் கத்தியால் குத்த செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்களும் ஹுசைன் தலிப் மிகவும் நல்லவர் என்றே கூறிகின்றனர். காவல்துறையினர் தங்களுக்கு ஒருவர் தகவல் கொடுத்ததாக கூறியே, தலிபை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக பாராதிய ஜனதா யுவா மோர்சாவின் உறுப்பினர் ஹிமான்ஷு கசப், ’சம்பலில் உள்ள மேகா உணவகத்தில், இறைச்சியை கடவுள் படம் உள்ள செய்தித்தாளில் மடித்து தருகிறார்கள். கடவுள் படம் உள்ள 100 மேற்பட்ட செய்தித்தாள் அங்கே இருக்கிறது.சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ட்வீட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்வீட் பதிவு செய்யப்பட்ட அரை மணி நேரத்திலே, இக்கடையின் உரிமையாளர் ஹிசைன் தலிப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் சட்டரிதியாக போராடி ஹுசைன் தலிப் விடுதலை செய்ய உள்ளனர்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment