குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவுடன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒருசில மாநிலங்களில் அசைவ உணவாக சிக்கன் வழக்கப்படுகிறது. அதேபோல் வாழைப்பழம் வழக்குவதும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய உணவு திட்டத்தில் முட்டை வழங்குவதற்கு அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநிலத்தில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைகள் தங்களது விருப்பத்தை மிக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய தரவுகளின்படி, மதிய உணவு சாப்பிடும் மாணவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் வாழைப்பழங்கள் மற்றும் சிக்கனுக்கு மாற்றாக முட்டைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
டிசம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 47.97 லட்சம் மாணவர்களில் எடுக்கப்பட்ட சர்வே கணக்கின்படி 38.37 லட்சம் மாணவர்கள் முட்டையையும், 3.37 லட்சம் மாணவர்கள் வாழைப்பழங்களையும், 2.27 லட்சம் மாணவர்கள் சிக்கனையும் விரும்புவதாக பொதுக்கல்வித் துறை அளித்த தரவுகள் தெரிவிக்கின்றன.
2022-ம் ஆண்டு ஜூலை மாதம், குழந்தைகளின் உணவில் முட்டைகள் சேர்க்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட ஒரு பைலட் ஆய்வில் சிறப்பாக முடிவுகள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாநிலப் பள்ளிக் கல்வித் துறை, பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் சமைத்த சூடான உணவைத் தவிர, முட்டை, வாழைப்பழம் மற்றும் சிக்கனை தேர்வு செய்யலாம் என்று அறிவித்தது.
துணை ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ். பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (மதியம் உணவுத் திட்டம்) திட்டத்தின் கீழ் புதுமையான தலையீட்டு நடவடிக்கைக்கான நெகிழ்வுத்தன்மையின் ஒரு பகுதியாக, நடப்பு கல்வியாண்டில் 2022-ல் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு 46 நாட்களுக்கு வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முட்டை தேர்வு செய்த 38.37 லட்சம் மாணவர்களில், பெரும்பான்மையான 15.67 லட்சம் மாணவர்கள் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதைத் தொடர்ந்து பெங்களூரு (8.65 லட்சம்), கலபுர்கி (8.33 லட்சம்), மைசூரு பிரிவு (5.70 லட்சம்).
இது தொடர்பாக சண்டே எக்ஸ்பிரஸிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், “ஊட்டச்சத்து குறைபாடு கல்விக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவில் முட்டை வாழங்கும் திட்டத்தை நீடித்துள்ளோம். உணவு என்பது விவாதத்திற்குரிய விஷயம், அதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், முன்னோடியாக செயல்படுத்தப்பட்ட பிறகு கல்யாண்-கர்நாடகா பகுதியில் இருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றதால், மற்ற மாவட்டங்களிலும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உணவில் முட்டை சேர்க்க முடிவு செய்தோம்.
டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில், கர்நாடக அரசு பிதார், கல்புர்கி, பல்லாரி, விஜயநகர மாவட்டங்களை உள்ளடக்கிய சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய கல்யாண்-கர்நாடகா பகுதியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்ட ஒரு முன்னோடி ஆய்வை மேற்கொண்டது.இருப்பினும், பைலட் ஆய்வு மதத் தலைவர்கள் மற்றும் மடங்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. முட்டைகளை வழங்குவது சைவ உணவு உண்பவர்களுக்கு எதிரான “பாகுபாடு” இல் முடிவடையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
லிங்காயத் பீடாதிபதி சன்னபசவானந்தா சுவாமிஜி 2021 டிசம்பரில், “முட்டை கொடுத்தால் பள்ளிகள் ராணுவ விடுதிகளாக மாறும். அதற்கு மாறாக தானியங்கள், பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும். இத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்திருந்தார்.
அதேபோல் ஹரிஹர பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி சுவாமி வசனானந்த் குரு உட்பட மற்றவர்கள், முட்டைகளை அறிமுகப்படுத்துவது “நம்முடைய மதச் சடங்குகளைப் பொருத்தவரை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மேலும் குழந்தைகள் வழிதவறிச் செல்வதற்கான நிலையை உருவாக்கும் என்று கூறியிருந்தனர்.
தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ன் மாநிலத்தின் நிலை அறிக்கை கூட பள்ளிகளில் மதிய உணவில் முட்டை மற்றும் இறைச்சி வழங்குவது “வாழ்க்கை முறை சீர்குலைவுகளை” ஏற்படுத்தும் என்றும், 4 சதவீத மாணவர்கள் முட்டைகளை உட்கொள்ள “விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளது. இந்த நிலைக் கட்டுரை பல சமூகத்தினரால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி, ஆய்வில் ஈடுபட்ட அரசு, ஜூலை 22ல், மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்தது.
பல்லாரி, பிதார், கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், விஜயபுரா மற்றும் யாத்கிர் மாவட்டங்களில் 1-8 வகுப்புகளில் சுமார் 14.4 லட்சம் மாணவர்கள் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழகம், யாத்கிர் மற்றும் கடக் ஆகிய இரண்டு மாவட்டங்களின் இரண்டு குழந்தைகளின் சராசரி உயரம், எடை மற்றும் சராசரி பிஎம்ஐ ஆகியவற்றில் மாற்றங்களைக் கண்காணித்தது.
இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 60 பள்ளிகளில் 4,500 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் யாத்கிரில் உள்ள மாணவர்களுக்கு முட்டை (மற்றும் மாற்றாக வாழைப்பழங்கள்) வழங்கினர், அதே நேரத்தில் கடக்கில் உள்ளவர்களுக்கு பாலுடன் சைவ உணவு வழங்கப்பட்டது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்த ஆய்வில், மதிய உணவின் ஒரு பகுதியாக முட்டைகள் வழங்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கான தெளிவான சான்றுகள்” வந்துள்ளன, 8 ஆம் வகுப்பில் உள்ள பெண்கள் தங்கள் சகாக்களை விட 71% வரை அதிக எடையைப் பெறுகிறார்கள். “இது யாத்கிர் பள்ளி மாணவர்களிடையே மேம்பட்ட எடை அதிகரிப்பின் தெளிவான குறியீடாகும். இதற்கு முட்டை மற்றும் வாழைப்பழங்கள் காரணமாகும்” என்று அறிக்கை கூறுகிறது.
குழந்தைகளின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) முட்டைகள் மற்றும் ஓரளவிற்கு வாழைப்பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் மேம்பட்டதாக ஆய்வு கூறுகிறது. வாழைப்பழங்கள், அவற்றின் அனைத்து நன்மைகளுக்கும், முட்டைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, மேலும் மாற்று “புரதங்கள் நிறைந்த சைவ உணவுகளை” ஆராய அதிகாரிகளை வலியுறுத்துகிறது. மதிய உணவு திட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பொது சுகாதார நிபுணரும் ஆய்வாளருமான டாக்டர் சில்வியா கற்பகம், அரசுப் பள்ளிகளில் முட்டை விநியோகம் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும்,இன்னும் கவனிக்கப்பட வேண்டும்.
. 46 நாட்களுக்கு மட்டும் அல்லாமல்”ஆண்டின் அனைத்து நாட்களுக்கும் முட்டை விநியோகத்தை நீட்டிக்க மதிய உணவுக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் நிறைய மாணவர்கள் தலித்துகள், மற்றும் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், முட்டை சாப்பிட விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“முட்டை விநியோகத்துக்கு மாணவர்கள் சாதகமாக பதிலளித்துள்ளனர். இருப்பினும், பட்ஜெட் மற்றும் மத உணர்வுகள் போன்ற காரணங்களால் திட்டத்தை விரிவுபடுத்துவதில் சிக்கல் உள்ளன. மத தலைவர்களால் ஆதரிக்கப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எங்களால் முட்டைகளை விநியோகிக்க முடியவில்லை. மூத்த குழந்தைகளிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் (9 மற்றும் 10 ஆம் வகுப்புகள்) சிறப்பு ஊட்டச்சத்து உணவை விரிவுபடுத்த நிதி ஒதுக்குமாறு மாநில அரசுக்கு நாங்கள் முன்மொழிந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“