பாதுகாப்புப் படையில் இருந்து ஏ.கே.47 மறைமுகமாக எடுத்து வந்த தமிழக வீரர்... மாவோய்ஸ்ட்டுகளிடம் விற்க முயற்சியா ?

ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 200 பணபரிவர்த்தனை நடத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது

Tamil Nadu CISF jawan Pandeeswaran : 2012ம் வருடம் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாண்டீஸ்வரன். அவரை அப்போது அந்த பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர். அதன் பின்பு மீண்டும் தன்னுடைய முயற்சியால் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் ராணுவ வீரராக பதவியேற்றார்.

தற்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பச்சேலி பகுதியில் இயங்கி வரும் நேசனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் வெளியேறிய பாண்டீஸ்வரன்

வெள்ளிக்கிழமை அன்று இந்த பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிளான பப்பு கோகோய் தன்னுடைய ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் 30 கேட்ரேஜ்களையும் தன்னுடைய அறையில் வைத்துவிட்டு மற்றொரு பணிக்காக சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்க்கும் போது அந்த துப்பாக்கி மற்றும் புல்லட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிசிடிவி கேமரா புட்டேஜ்ஜை சோதனை செய்து பார்த்த போது, வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை. ஆனால் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டும் தங்களின் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களின் பைகள் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருந்தது. அவர்களை அவசரமாக அழைத்து அவர்களின் பைகளை சோதனையிட்ட போது ஒருவருடைய பையில் இருந்த துணியில் க்ரீஸ் கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு துணியில் ஏ.கே. 47 துப்பாக்கி வைக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பைக்கு சொந்தக்காரரான பாண்டீஸ்வரனை விசாரிக்கும் போது, முதலில் மறுத்தார். பின்னர், வீட்டில் சொத்து தகராறு பிரச்சனைக்காக ஐவரை கொல்வதற்காக இந்த துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் சத்தீஸ்கர் வந்த பின்பு அந்த துப்பாக்கிகளை யாருக்கோ விற்கவும் திட்டமிட்டுள்ளார் பாண்டீஸ்வரன்.

பாண்டீஸ்வரனை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றார். ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 200 பணபரிவர்த்தனை நடத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய மற்ற பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புகள் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : மேகலாயா சுரங்கத் தொழிலாளர்களை காப்பாற்ற விரைந்த தமிழக வீரர்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close