Advertisment

பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் : மேற்கு வங்க திட்டத்திற்கு எதிர்க் கட்சிகள் விமர்சனம்

சொந்த பணத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதிக நிதி இருந்திருந்தால் இத்திட்டத்ததை மேலும் நீடித்திருப்போம் என்றும் ஆளும்கட்சி கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் : மேற்கு வங்க திட்டத்திற்கு எதிர்க் கட்சிகள் விமர்சனம்

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதே சமயம் ஆளும் கட்சிக்கும் பா.ஜ.வு.க்கும் இடையே அம்மாநிலத்தில் தொடர்ந்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட மதிய உணவு மெனுவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்கள் வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிரான குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. மேலும் 4 மாதங்கள் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "நிதி பற்றாக்குறை" காரணமாக இத்திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மக்கள் மீது அக்கறையுள்ள "எங்கள் முதல்வர் தலைமையின் கீழ், மாணவர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இந்த நோக்கம் ஒருபடி மேலே சென்றுள்ளது. எங்களின் சேமிப்பிலிருந்து மாணவர்களுக்கு கோழிக்கறி மற்றும் பருவகால பழங்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தை தொடர்வதில் நாங்கள் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். ஆனால் அதற்கு அதிக நிதி தேவைப்படும், துரதிர்ஷ்டவசமாக, எங்களிடம் அவ்வளவு நிதி இல்லை என்று பாசு கூறியுள்ளார்.

இதனிடையே ஜனவரி 3 ஆம் தேதி மேற்குவங்க பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, பள்ளிகளில் சாப்பாடு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டைகள் உள்ளடக்கிய  வழக்கமான மெனுவில் கூடுதல் கோழி மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருறந்தது. இத்திட்டத்திற்காக ரூ.372 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். இப்போது பிஎம் போஷன் என்று அழைக்கப்படும் இத்திட்த்திற்கு மதிய உணவு ஒரு குழந்தைக்கு கூடுதல் பணம் வாரத்திற்கு ரூ.20 ஆகவும் 16 வாரங்களுக்கு இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவதாக அறிவிக்கை தெரிவிக்கிறது. பிஎம் போஷனின் செலவை மாநில அரசும் மத்திய அரசும் 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், இத்திட்டத்திற்கு தேவைப்படும் ரூ.372 கோடி கூடுதல் நிதி முழுவதுமாக மாநிலத்தின் பங்கில் இருந்து செலுத்தப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாரத்தின் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தொகுதிகளில் கூடுதல் பொருட்கள் வழங்கப்படும் என்ற இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனிடையே வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்குவங்கத்தில் கிராமபுற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மேற்குவங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை, கிராமப்புற தேர்தல் நடந்தபோது பரவலான வன்முறைகளால் சூழப்பட்டது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், “மத்திய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு திடீரென ஏன் தோன்றியது? இதன் பொருள் என்னவென்றால், நிலைமை பகடைக்காடாக இருப்பதையும், கிராமப்புறத் தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறாது என்பதையும் முதல்வர் புரிந்துகொண்டுள்ளார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் இப்போது கோழிக்கறியை கையில் எடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோழி மற்றும் பழங்களுக்கு ஈடாக மக்களின் ஓட்டுகளை வாங்க முயல்கிறது என்று கூறியுள்ளார்..

சிபிஐ(எம்) மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தியும் மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார். மாநில அரசு மதிய உணவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது நல்லது. இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. ஆனால், உணவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவா அல்லது தேர்தல் நெருங்கி வருவதால் அரசாங்கம் இதைச் செய்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசாங்கம் இந்த திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்தால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், பஞ்சாயத்து தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. “ஆனால் வங்காள மக்களுக்கு சிறந்த விஷயங்கள் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். இருப்பினும், இந்த நடவடிக்கை ஊழலற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்”என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனை குறித்து கேள்வி எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி சாந்தனு சென், அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியலைப் பார்க்க கூடாது. பாஜகவுக்கு, முதலில் உங்கள் சொந்த அரசாங்கத்தின் முடிவுகளை விமர்சியுங்கள் என்று நான் கூறுவேன். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது (குறைவாக இருந்தது) பார்த்தோம். குஜராத் தேர்தலுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் இது பாஜகவின் "குறுகிய மனப்பான்மை என்று விமர்சித்த சென் முதல்வர் மம்தா பானர்ஜி ஆண்டு முழுவதும் மக்களுக்காக உழைக்கிறார் என்று காறியுள்ளார்

வங்காளத்தில் பள்ளிகளில் சிக்கன் என்பது வியக்க வைக்கிறது, ஏனெனில் பிற மாநிலங்களில் மதிய உணவில் முட்டைகளை சேர்க்கும் நடவடிக்கைகளுக்கே சில குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. தற்போது, 13 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் "கூடுதல் உணவுப் பொருட்களின்" ஒரு பகுதியாக மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படுகின்றன, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதனை தேர்ந்தெடுக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில், அங்கன்வாடிகளின் மெனுவில் முட்டை சேர்க்கும் முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவை, 2020ல் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி., தடை செய்தது. மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில், முட்டை சேர்க்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில், வங்காளக் கல்வி அமைச்சர் பாசு, மத்திய அரசுக்கு இதுபோன்ற சிறந்த நடைமுறைகளைத் தொடர எங்களுக்கு அதிக நிதி வழங்குமாறு ஒரு எதிர் ஆலோசனையை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment