Advertisment

மேற்குவங்க குண்டுவெடிப்பு, மாநில அரசுக்கு தொடர்பு இல்லை : மம்தா பானர்ஜி

West Bangal CM Mamata Banerjee : மேற்குவங்கத்தில் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ஜாகீர் ஹூசேன் மற்றும் அவரது ஆதரவாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி நலம் விசாரித்தார்.

author-image
WebDesk
New Update
மேற்குவங்க குண்டுவெடிப்பு, மாநில அரசுக்கு தொடர்பு இல்லை : மம்தா பானர்ஜி

West Bangal CM Mamata Banerjee : மேற்கு வங்க மாநிலத்தில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதிடா ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற திடீர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ஜாகீர் ஹூசேன் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

மேற்குவங்கத்தில், தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள ஜாகர் ஹூசைன்,முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள  நிமிதிடா ரயில் நிலையத்திற்கு சென்றபோது, அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் அவர் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த ஜாகீர் ஹூசேன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அனைவரும் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த ஜாகீர் ஹூசேன், கடந்த டிசம்பர் மாதம் பாஜகவில் இணைந்த முன்னாள் டிஎம்சி அமைச்சர் சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து, டி.எம்.சியின் முர்ஷிதாபாத் மாவட்டத் தலைவர் அபு தாஹர் கான் கூறுகையில்,“அமைச்சரை தாக்கியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், யார் பொறுப்பு என்பதைக் கண்டறியவும் நான் எஸ்.பியிடம் கேட்டுள்ளேன், ”என்று தெரிவித்துள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெறும் பசு கடத்தல் மற்றும் ஊழல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக அமைச்சர் ஜாகீர் ஹூசேன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் மீது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும் பெர்ஹாம்பூர் மக்களவை எம்.பி.யுமான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு நிலைமை மிகக் குறைவு ”என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் குண்டுவெடிப்பில் சிக்கிபடுமாயமடைந்துள்ள அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ .5 லட்சமும், சிறிய காயங்களுக்கு ஆளானவர்களுக்கு ரூ .1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து பேசிய அவர், இது ஒரு “பெரிய சதித்திட்டத்தின்” ஒரு பகுதி.

சாதாரண மனிதர்களைப் போல ரயிலில் ஏற முயன்று, ரிமோட்டைப் பயன்படுத்தி வெடிகுண்டை வெடிக்க செய்ததாக அந்த இடத்தில் கூறியுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றாலும், நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறியதைதான் நான் சொல்கிறேன். இந்த சம்பவத்திற்கு முழு காரணம் ரெயில்வே பாதுகாப்புதான் என்று குற்றம் சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, ரயில்வே நிர்வாகம் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இந்த சம்பவத்தில் மாநில அரசுக்கு பங்கு இல்லை. இது ரயில்வேயின் சொத்து. இது நிச்சயமாக ஒரு பெரிய சதி ”என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment