2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு

Women second marriage : 2வது திருணம் செய்த பெண்ணுக்கு கிராமபஞ்சாயத்தில் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலா மாவட்டத்தில் விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக திருமணம் செய்த 35 வயதான ஒரு பெண், ஒருவருக்கு தண்டனையாக துப்புவதை நக்க வேண்டும் என்றும், மறுமணம் செய்த அந்த பெண்ணுக்கு ரூ .1 லட்சம் அபராதம் செலுத்தவும் அவரது சமூகத்தைச் சேர்ந்த “சாதி பஞ்சாயத்து” தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்கான் மாவட்டத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மகாராஷ்டிரா சமூக புறக்கணிப்பு (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டத்தின் 2016 – 5 மற்றும் 6 பிரிவுகளின் கீழ் ஜல்கானின் சோப்டா நகர காவல் நிலையத்தில் சாதி பஞ்சாயத்தின் பத்து உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, தற்போது இந்த வழக்கு அகோலாவில் உள்ள பிஞ்சர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்த சம்பவம் ஏப்ரல் 9 ஆம் தேதி அகோலாவின் வாட்கான் கிராமத்தில் நடந்தது, பாதிக்கப்பட்ட அந்த பெண், ‘நாத் ஜோகி’ சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரின் இரண்டாவது திருமணத்தை சாதி பஞ்சாயத்து ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சாதி பஞ்சாயத்து கூட்டத்தில், உறுப்பினர்கள் பெண்ணின் இரண்டாவது திருமணம் பற்றி விவாதித்து, அவரது சகோதரி மற்றும் பிற உறவினர்களை அழைத்து, இந்த விவகாரத்தில் தங்கள் “தீர்ப்பை” வழங்கியுள்ளனர். தீர்ப்பின் படி, சாதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழை இலைகளில் துப்ப வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் அதை தண்டனையாக ஏற்றுக்கொண்டு நக்குவார். மேலும் சாதி பஞ்சாயத்துக்கு பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ .1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் ஆனால் இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கூட்டத்தில் இல்லை. மேலும் பஞ்சாயத்தினரின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு தனது சமூகத்திற்கு “திரும்பி வரலாம்” என்று கூறப்பட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.

சாதி பஞ்சாயத்தின் முடிவை பாதிக்கப்பட்டவருக்கு அவரது உறவினர்கள் தெரிவித்தனர். பஞ்சாயத்தாரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக சோப்டா நகர காவல் நிலையத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அகோலாவில் நடந்ததால், இந்த வழக்கின் மேல் விசாரணைக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளது, என்று ஜல்கான் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் முண்டே தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil update woman to lick spit for second marriage asks caste panchayat

Next Story
உலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்Global oxygen tenders, three firms line up for a fraction of supply, ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள், ஆக்ஸிஜன் சப்ளை, Oxygen tenders, india, world
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com