Advertisment

Coronavirus Updates : டாஸ்மாக் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Coronavirus Latest Updates: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 Cases Update: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Advertisment

 

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 3,525 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி நிலவரத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 74,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.  அதில் 24,386 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், 2,415 பேர் இறந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் மரண விகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 32.8 சதவீதமாகவும் உள்ளது.

நிர்மலா சீதாராமன் LIVE Updates: சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தனது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக இந்திய அரசு வந்தே பாரத் மிஷனை மே 7 ஆம் தேதி துவக்கி வைத்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸால் இயக்கப்படும் 43 விமானங்களில் இந்தியாவுக்கு கடந்த 6 நாட்களில் 8503 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Live Blog

Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.



























Highlights

    23:49 (IST)14 May 2020

    பாஜக தலைவர் முருகன், தேமுதிக பிரேமலதா மீது வழக்குப்பதிவு

    விழுப்புரம் அருகே சிறுமதுரையில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற பாஜக தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது கூட்டமாக சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    21:35 (IST)14 May 2020

    ஆந்திராவில் ஊரடங்கின் போது சென்ற டிராக்டரை துரத்திய போலீஸ்; மின் கம்பத்தில் மோதி 9 பேர் பலி

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தடுப்புகளை தாண்டி டிராக்டரில் சென்றவர்களை காவல்துறை துரத்தியதால், அவர்களிடமிருந்து தப்பி செல்ல டிராக்டர் ஓட்டுனர் முயற்சித்தார். அப்போது டிராக்டர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் பாய்ந்ததில் டிராக்டரில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக பலினார்கள்.

    20:47 (IST)14 May 2020

    டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 1,000 பேர் சென்னை வந்தனர்

    டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 1,000 பேர்களுக்கு மேல் இன்று சென்னைக்கு வந்தனர். டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் சென்னைக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோடஹ்னை நடத்தப்பட உள்ளது. அவர்கள் அனைவரும் முகாம்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    20:29 (IST)14 May 2020

    தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

    தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    19:39 (IST)14 May 2020

    ஆண்டு வரி, வாகன வரிக்கு ஜூன் 30 வரை அவகாசம் - தமிழக அரசு அறிவிப்பு

    ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல்.10 லிருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அறிவித்துள்ளது. அதே போல, ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்து வகையான வாகன வரியை செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளத் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    18:18 (IST)14 May 2020

    தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும், 5,625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

    16:46 (IST)14 May 2020

    டாஸ்மாக் திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல; ஐகோர்ட்டில் டாஸ்மாக் விளக்கம்

    தமிழகத்தில் மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

    இதனிடையே இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஆன்-லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16:30 (IST)14 May 2020

    துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை

    தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது வழங்க தேசிய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

    16:29 (IST)14 May 2020

    தன்னிறைவுத் திட்டத்தின் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவுத் திட்டத்தின் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் போன்றோருக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    15:05 (IST)14 May 2020

    செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200

    ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200

    - தமிழக அரசு அறிவிப்பு

    * 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்

    15:05 (IST)14 May 2020

    கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ?

    கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ?

    பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

    15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை

    14:11 (IST)14 May 2020

    8,470 ஆக உயர்வு

    டெல்லியில் மேலும் 472 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை - 8,470 ஆக உயர்வு - இதுவரை 3,045 பேர் குணமடைந்துள்ளனர்

    14:10 (IST)14 May 2020

    காய்கறி மார்க்கெட் செயல்படாது

    'ஜி கார்னரில் 16 ஆம் தேதி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படாது'

    திருச்சி பொன்மலை ஜி கார்னரில் வரும் 16 ஆம் தேதி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படாது

    வரும் 17 ஆம் தேதி ஞாயிறன்று திருச்சியில் 10 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படாது

    - மாவட்ட ஆட்சியர்

    13:46 (IST)14 May 2020

    கனமழை பெய்ய வாய்ப்பு

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    * தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    மீனவர்கள் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் மத்திய வங்க‌க்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்

    13:45 (IST)14 May 2020

    மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

    பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிகமாக பரிசோதனை செய்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது. தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

    கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது. கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - பிரதீப் கவுர்

    13:41 (IST)14 May 2020

    மக்கள் அச்சப்பட தேவையில்லை

    ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்

    * ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

    * தமிழகத்தில் மருத்துவ பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் - மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்

    13:41 (IST)14 May 2020

    100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை

    முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டம் நிறைவு. ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது, ஊரடங்கு தொடரும் - மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர் சந்திப்பு

    13:25 (IST)14 May 2020

    டாஸ்மாக் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் பதில்

    நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் மதுபானம் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் டிஜிட்டல் முறையில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

    13:18 (IST)14 May 2020

    ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை

    ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது, ஊரடங்கு தொடரும் என்று முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப்பிறகு மருத்துவ நிபுணர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    12:36 (IST)14 May 2020

    தமிழகத்தில் ஆம்னி பஸ் பயண கட்டணம் விர்ர்

    தமிழகத்தில் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:29 (IST)14 May 2020

    மதுரை வாடிப்பட்டியில் விவசாய பணி தொடங்கியது

    விவசாய பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டதால் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாய பணிகள்  துவங்கின. வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாய பணியாளர்கள் குடும்பத்துடன் பணிபுரிகிறார்கள்

    publive-image

    11:30 (IST)14 May 2020

    தாங்குமா தமிழகம் - கமல்ஹாசன் டுவி்டடர் பதிவு

    காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு- இதைதாங்குமா தமிழகம் என்று கமல்ஹாசன், தமிழக அரசை டுவிட்டரில் சாடியுள்ளார்.

    11:22 (IST)14 May 2020

    சென்னையில் போராட்டம் நடத்த தடை நீட்டிப்பு

    சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரணி, உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வருகிற 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:07 (IST)14 May 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    publive-image

    10:42 (IST)14 May 2020

    பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    பிரதமர் மோடி நிகழ்த்திய உரையை தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதித்திட்டங்களை நேற்று ( மே 13) அறிவித்திருந்த நிலையில், இன்று ( மே 14) மாலை 4 மணிக்கு மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:25 (IST)14 May 2020

    ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து

    தேசிய அளவிலான ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். ஜூன் 30 வரை, பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    publive-image

    10:23 (IST)14 May 2020

    உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு

    டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    10:13 (IST)14 May 2020

    78,003 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,235 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3722 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:24 (IST)14 May 2020

    ஒட்டன்சத்திரத்தில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு

    வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை எனப் புகார் எழுந்ததை அடுத்து,  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

    09:17 (IST)14 May 2020

    திருமழிசை சந்தை: சென்னையில் ஒரு கிலோ காய்கறி விலை பட்டியல்

    தக்காளி – ரூ 10

    கேரட்- ரூ.20

    பீட்ரூட்- ரூ.20

    புடலங்காய்- ரூ.20

    பீன்ஸ் – ரூ. 50 முதல் 60 ( நேற்றை விட சற்று குறைவு )

    சவுச்சோவ் – ரூ.20

    சேனை கிழங்கு – ரூ.20

    வெண்டைக்காய் – ரூ.25

    உருளைக்கிழங்கு – ரூ.25

    சின்ன வெங்காயம் – ரூ.50 நேற்றை விட சற்று குறைவு )

    பெரிய வெங்காயம் – ரூ.15

    இஞ்சி – ரூ.60

    09:04 (IST)14 May 2020

    டாஸ்மாக் விவகாரம் - சென்னை தலைமை நீதிபதி தலமையில் இன்று விசாரணை

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு  இன்று விசாரிக்க உள்ளது.  

    09:00 (IST)14 May 2020

    கொரோனா தோற்று - மாநிலங்கள் நிலவரம்

    கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா & நகர் ஹவேலி, கோவா, சத்தீஸ்கர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரத்தில் ஆகிய 9 மநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

    மேலும், டாமன் & டையூ, சிக்கிம், நாகாலாந்து, இலட்சத்தீவுகளில் இதுவரையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    08:56 (IST)14 May 2020

    இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளது:

    இந்தியாவில் 352 அரசு ஆய்வகங்கள் மற்றும் 140 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் 1 இலட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 18,56,477 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 94708 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

    08:54 (IST)14 May 2020

    மொத்த எண்ணிக்கையில் 2.75 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப்பிரிவு சிகிச்சையில் உள்ளனர்

    நேற்றைய நிலவரத்தின்படி,சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளில் 2.75 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப்பிரிவு சிகிச்சையிலும், 0.37 சதவீதம் பேர் வென்டிலேட்டர்கள் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.89 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

    08:52 (IST)14 May 2020

    இந்தியாவில் குணமடைபவர்கள் எண்ணிக்கை 32.8 சதவீதமாக உயர்வு

    கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 3,525 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி நிலவரத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 74,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. அதில் 24,386 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், 2,415 பேர் இறந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் மரண விகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 32.8 சதவீதமாகவும் உள்ளது

    Coronavirus Updates : ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்கு இந்திய பொருளாதாரத்திற்கு உதவ, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

    நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர் என்று தெரிவித்துள்ளது.

    Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment