Advertisment

லண்டனில் மாயமான தெலங்கானா பாஜக பிரமுகர் மகன் சடலமாக மீட்பு

Telangana BJP VIP's Son found dead body in Britten: தெலங்கான மாநில பாஜக பிரமுகர் மகன் கடந்த மாதம் லண்டனில் மாயமான நிலையில், அவரது உடல் கிழக்கு சூசெக்ஸ் மாகாணத்தில் உள்ள மலைக்குன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ujwal Sriharsha,Khammam District President of BJP, BJP, Telangana BJP VIP, london, Ujwal Sriharsha, தெலங்கானா பாஜக பிரமுகர், பாஜக உதய் பிரதாப் மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, உஜ்வால் ஸ்ரீஹர்ஷா உடல் சடலமாக மீட்பு, Khammam District BJP President Uday Pratap, Uday Pratap son Ujwal Sriharsha dead, Indian in London

Ujwal Sriharsha,Khammam District President of BJP, BJP, Telangana BJP VIP, london, Ujwal Sriharsha, தெலங்கானா பாஜக பிரமுகர், பாஜக உதய் பிரதாப் மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, உஜ்வால் ஸ்ரீஹர்ஷா உடல் சடலமாக மீட்பு, Khammam District BJP President Uday Pratap, Uday Pratap son Ujwal Sriharsha dead, Indian in London

Telangana BJP VIP's Son Found Dead in Britten: தெலங்கானா மாநில பாஜக பிரமுகர் மகன் கடந்த மாதம் மாயமான நிலையில், அவரது உடல் பிரிட்டனில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Advertisment

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்ட பாஜக தலைவர் உதய் பிரதாப். இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா (23) இவர் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திர கற்றல் மற்றும் செய்றகை நுண்ணறிவு துறையில் எம்.எஸ் படித்து வந்தார்.

உஜ்வால் ஸ்ரீஹர்ஷா லண்டனில் இருந்து தனது பெற்றோர்களுடன் போன் மூலம் தினமும் பேசிவந்துள்ளார். ஆனால், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் அவர் பெற்றோர்களை தொடர்புகொண்டு பேசவில்லை. அதற்குப் பிறகு பெற்றோர்கள் அவருக்கு போன் செய்தாலும் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, அவரது தந்தை உதய் பிரதாப் தனது மகன் மாயமானது குறித்து லண்டன் போலீசாரைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

மேலும், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மாயமான உஜ்வால் ஸ்ரீஹர்ஷாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு சூசெக்ஸ் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தளமான கடலோர மலைக்குன்றுகள் பகுதியில் ஆகஸ்ட் 1- ஆம் தேதி உஜ்வால் ஸ்ரீஹர்ஷாவின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உஜ்வால் ஸ்ரீஹர்ஷா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உஜ்வால் ஸ்ரீஹர்ஷா விஞ்ஞானியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்துவந்ததாகவும் அது தொடர்பாக அண்மையில் அவர் ஜப்பான் சென்று வந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment