"பொறியில்" சிக்கினான் தெலுங்கானா வீரப்பன்!!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டி கடத்தி தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் ஸ்ரீனு. மாட்டுவண்டிகளில் வைத்து கடத்தி வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை அச்சறுத்திவந்த மரக்கடத்தல் மன்னன் ‘தெலுங்கானா வீரப்பன்’ என்ற பெயரால் அழைக்கப்படும் யேட்லா சீனிவாஸ் என்ற ஸ்ரீனு தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா, ஆந்திரபிரேதசம், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா வனப்பகுதிகளில் மரங்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டி கடத்தி தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் ஸ்ரீனு. வனத்துறையினருடன் இணைந்து போலீசார் நடத்தும் அதிரடி சோதனைகளிலிலிருந்து எல்லாம் அனாசயமாக ஸ்ரீனு தப்பிவிடுவார். அந்தளவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு உதவிகள் சென்று கொண்டிருந்தன.

வனப்பகுதியின் ராஜாவாகவே, இந்த ஸ்ரீனு செயல்பட்டு வந்துள்ளார். போலீசார், வனத்துறை பிடிக்க முயலும் போதெல்லாம் அருகிலுள்ள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைவார். இதன்காரணமாக, இவரை பிடிக்க கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீனுவை பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. இதனையடுத்து, படப்பள்ளி பகுதியில் பதுங்கியிருந்த ஸ்ரீனு, தெலுங்கானா போலீசாரில் பிடியில் சிக்கி கைதானார். இவருடன் மற்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, வனத்துறை உயர் அதிகாரி கூறியதாவது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள தேக்கு உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஸ்ரீனு, அனுப்பி வந்துள்ளார். இதன்காரணமாக, வனப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இவனுடைய இத்தகைய நடவடிக்கைகளால், மாஞ்செரியல்,மந்தாணி மற்றும் சென்னூர் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களில் விலையுயர்ந்த மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டன.

ஸ்ரீனு, தெலுங்கானா மட்டுமல்லாது, அருகிலுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மர கடத்தல் வேட்டைகளை அரங்கேற்றியுள்ளார். மரக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

ராமகுண்டம் போலீஸ் கமிஷனர் சத்யநாராயணா கூறியதாவது, ஸ்ரீனு உடன் சேர்த்து 2 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். தெலுங்கானாவில் மட்டும் ஸ்ரீனு மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மரங்களை வெட்டும் ஸ்ரீனு கும்பல், அதனை மாட்டுவண்டிகளில் வைத்து கடத்தி வந்துள்ளது. மாட்டு வண்டிகளை பெரும்பாலும் வனத்துறையினர் சோதனையிடமாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த முறையினை பின்பற்றிவந்துள்ளனர்.
மரக்கடத்தலின் மூலம் கிடைக்கும் பணத்தை, தனக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீனு வழங்கிவந்துள்ளார்.

ஸ்ரீனு தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மர அறுவை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் விசாரணையை நடத்த இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close